சேரன் மற்றும் கமல் ஹாசன் எனக்கு துரோகம் இழைத்தனர்- மீரா மிதுன் ஆவேசம்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின் நாயகியாக வலம் வந்த இவர், வெளியே வந்தபின்னரும் சர்ச்சைகளை உருவாக்க ட்விட்டர்…

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர், அதில் ஒருவர் மீரா மிதுன். உள்ளே அனைத்துப் போட்டியாளர்களுடன் சண்டையிட்டு சர்ச்சையின் நாயகியாக வலம் வந்த இவர், வெளியே வந்தபின்னரும் சர்ச்சைகளை உருவாக்க ட்விட்டர் போட்டு வருகிறார்.

தற்போது ஒரு விடியோவினையும் வெளியிட்டுள்ளார் அதில் அவர் பேசியதாவது, “சேரன் என்னிடம் நடந்து கொண்டதற்கு நான் மிகவும் மன வேதனை அடைந்தேன், ஆனால் போட்டியாளர்கள் யாரும் எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

d29a6e73aa242b2cb8f91a9b906e3f18

எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது என்று அழுது கதையை மாற்றிய சேரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல் ஹாசனும் எனக்கு ஆதரவு தெரிவிக்காமல் நடந்த விஷயங்களை மறைத்துவிட்டார், 2 பெண் குழந்தைகளை வைத்துள்ள கமல் ஹாசன் இவ்வாறு நடந்து கொண்டது தவறு.

இவர்கள் இருவரும் எனக்கு பதில் அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் நான் அப்பா இல்லாத பொண்ணு, என் அப்பா இருந்து இருந்தால் நடப்பதே வேறு என்று ஆவேசமாக கத்தியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன