அஜீத்துக்கிட்ட ஓப்பனா கேள்வி கேட்ட பிரபலம்… நண்பன்கிட்ட பேசுற மாதிரி பதில் சொன்ன தல…!

By Sankar Velu

Published:

அமர்க்களம் படத்தின்போது நடிகர் அஜீத்துக்கும், ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது. அப்போது இருவரும் வீட்டார்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இல்லற வாழ்க்கை மற்ற நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளன.

குழந்தைகள் தற்போது வளர்ந்த சிறுவர்கள் ஆகிவிட்டனர். பைக் மற்றும் கார் ரேஸில் தணியாத ஆர்வம் கொண்டவர் அஜீத். அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது எல்லாம் சேஸிங்கில் கலந்து கொள்வார். ரசிகர்களிடம் முதல்ல குடும்பம் தான் முக்கியம். அப்புறம் தான் நாங்கன்னு புரிய வைத்துள்ளார். அவர்கள் நல்லாருக்கணும் என்பதற்காக ரசிகர் மன்றங்களையே கலைத்தவர் தான் அஜீத்.

தமிழ்த்திரை உலகில் மற்ற நடிகர்களை ஒப்பிடும்போது ரொம்பவே வித்தியாசமானவர் அல்டிமேட் ஸ்டார் அஜீத். அவருடைய குணம் நம்மை மட்டுமல்ல. சினிமா உலகினரையே வியக்க வைக்கும். அந்த வகையில் பிரபலம் ஒருவர் வியந்து சொன்ன தகவல் தான் இது.

குக் வித் கோமாளி புகழ் செஃப் வெங்கடேஷ் பட் அக்கார்டு மெட்ரோபொலிட்டன் என்ற ஓட்டலில் பணிபுரிந்தார். புதுச்சேரி மற்றும் ஊட்டியில் இந்த ஓட்டல்கள் உள்ளன. நடிகர் அஜீத்தை சந்தித்த அனுபவம் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

vbat, ajith
vbat, ajith

‘தல’ அஜீத் நான் வேலை செய்ற ரெஸ்டாரெண்டுக்கு சாப்பிட வந்தார். நான் அவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது ‘சார் நீங்க முதல்ல ஐ லவ் யூ சொன்னீங்களா, இல்ல ஷாலினி மேம் சொன்னாங்களா?’ன்னு கேட்டேன்.

அவர் இருந்த நிலைமையில் என்னை மாதிரி வேற யார்கிட்டயாவது கேட்டிருந்தா ‘கொஞ்சம் உங்க வேலையை பார்த்துக்கிட்டுப் போறீங்களா…’ன்னு சொல்வாங்கன்னு சொல்லிருக்கலாம். ஆனா இவர் ‘அவங்க எங்கேங்க சொன்னாங்க. நான் தான் பின்னாடி போயிட்டு ஐ லவ் யூ சொன்னேன்’ என்று ஒரு நண்பன்கிட்ட சொல்ற மாதிரி எங்கிட்ட சொன்னாரு என்று சொல்கிறார் செப்.

இந்த சம்பவத்தின் மூலம் அஜீத் எவ்வளவு மென்மையான குணம் கொண்டவர் என்பது நமக்குத் தெரிகிறது. தவிர தேவையில்லாமல் யாரிடமும் எதையும் அவர் பேச மாட்டார். எந்த வம்புக்கும் போகாதவர். தான் உண்டு. தன் வேலை உண்டு என்று இருப்பவர்.

அரசியல் மற்றும் பிற நடிகர், நடிகைகள் குறித்து எதிலும் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள மாட்டார் இந்தத் தல நடிகர். தற்போது விடாமுயற்சி, குட்பேட் அக்லி என இருபடங்களில் நடித்து வருகிறார். இவற்றில் விடாமுயற்சி படம் முதலில் வெளியாக உள்ளது.