ரஜினிக்கு ஒரு எஜமான போல், கமலுக்கு ஒரு தேவர் மகன் போல், கேப்டன் விஜயகாந்த்துக்கும் ஒரு கிராமத்து பண்ணையாராக, நாட்டாமையாக, பெரிய மனிதராக அமைந்த படம் தான் சின்னக் கவுண்டர். கேப்டன் விஜயகாந்தின் வெற்றிப் படங்களில் வானத்தைப் போல, கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களின் வரிசையில் சின்னக் கவுண்டர் படத்துக்கு தனி இடம் உண்டு.
இப்படத்தின் இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார், மேலும் இப்படத்தின் பாடல்களையும் அவரே எழுதினார். படமும் சூப்பர் டூப்பர் ஹிட், இளையராஜாவின் இசையில் பாடல்களும் கிராமத்து மண் வாசனை வீசியது. இப்படம் பற்றி ஆர்.வி. உதயக்குமார் கூறுகையில், “ நான் சின்னகவுண்டர் படம் குறித்து விஜயகாந்திடம் சொன்னது இதான். அதில் துண்டை இடுப்பில் கட்டுனா கோயிலுக்கு போறான், தோளில் போட்டா பஞ்சாயத்துக்கு போறான், அப்படி தூக்கி வச்சா பட்டைய கிளப்புறான்- இதுதான் கேரக்டர். ஊரே பார்த்து கையெடுத்து கும்பிடும் அவர் ஒரு நாள் ஊருக்கு முன்பு தலை குனிந்து சென்றார். அதுக்கு காரணம் என்ன- இதுதான் கதை.
ஆனால் படத்தில் விஜயகாந்துக்கு டயலாக்கே இருக்காது. இதை என்னிடம் நேரடியாக கேட்காமல் என் அசிஸ்டென்டுகளை கூப்பிட்ட விஜயகாந்த், “ஹே என்ன உதய் எனக்கு டயலாக்கே வெக்க மாட்டானா, அவன் அவன் பேசுறான், நான் பாட்டுக்கு சும்மாவே நின்னுகிட்டு இருக்கேன்.. என்னங்கடா நடக்குது. இந்த படம் ஓடாதுன்னு சொன்னார்.
பெயரைச் சொன்னதால் ஆத்திரம் அடைந்த நடிகை.. செம டோஸ் வாங்கிய போட்டோகிராபர்
அதன் பிறகு நான் விஜயகாந்திடம் சொன்னேன், இந்த படத்தில் ஹீரோவாகிய உங்கள் கேரடக்டர் உன்னதமானது. ஊரே உங்களை பற்றி பேசும் போது நீங்களும் உங்களை பற்றி பேசினால் நல்லா இருக்காது என்றேன். உடனே புரிந்து கொண்டு பின்னர் அது குறித்து கேட்பதையே விட்டுவிட்டார். இவ்வாறு உதயகுமார் தெரிவித்தார்.
மேலும் திரைப்படக் கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் எடுத்த ஊமை விழிகள் படத்திற்கு அப்போதைய பெரிய நடிகர்கள் யாரும் நடிக்க முன்வரவில்லை. ஆனால் விஜயகாந்த்தோ நாங்கள் கேட்ட 7 கால்ஷீட்டை விட அதிகமாகத் தேதி ஒதுக்கி மாணவர்களின் முயற்சியை ஊக்குவித்து நடித்துக் கொடுத்தார். படமும் ஹிட் ஆனது.“ என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் ஆர்.வி.உதயக்குமார்.