இர்பான்கான் மற்றும் ரிஷி கபூர் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்… ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிவு!!

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கானுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட அவரை அவரது குடும்பத்தினர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கானுக்கு ஏப்ரல் 29 ஆம் தேதி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட அவரை அவரது குடும்பத்தினர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 30 ஆம் தேதி பாலிவுட் நடிகரான ரிஷி கபூருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

62e81422d7c6e72d0b036b0664db46f4

பாலிவுட்டில் அடுத்த அடுத்த நாள் இறந்த இவர்களின் மரணம் பாலிவுட் திரையுலகத்தினை உலுக்கி எடுத்தது. கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவரது நெருங்கிய உறவினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இதுகுறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வருத்தம் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “இர்பான் கான் மற்றும் ரிஷி கபூர் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தார்கள். அவர்கள் இருவரின் இறுதிச் சடங்குக்கு யாராலும் செல்லக் கூட முடியவில்லை.

உண்மையில் அவர்கள் மரணம் துரதிர்ஷ்டவசமானலும், இது ரமலான் என்னும் புனித மாதம் என்பதால் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன