நடிகை அஞ்சலி ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார். மேலும், அப்படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது பிளாக் பாண்டி அஞ்சலியை பற்றி பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
நடிகை அஞ்சலி ராம் இயக்கத்தில் ஜீவா நடித்த கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஜீவா நடிப்பில் வெளியான அந்த படத்திற்கும் அஞ்சலிக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து பல தமிழ் படங்களில் நடித்திருந்தார். அதிலும் அங்காடித் தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சேட்டை போன்ற பல படங்கள் பெரும் வரவெற்ப்பை பெற்றது.
சினிமாவில் அஞ்சலியின் வளர்ச்சி:
நடிகை அஞ்சலி தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திரையுலகில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். திறமையான நடிகை என்ற பெயரையும் பெற்றிருந்தார். இடையில் சில தனிப்பட்ட காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அஞ்சலி தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகை அஞ்சலி சிங்கம் 2 படத்தில் பாடல் ஒன்றில் நடிகர் சூரியாவுடன் நடனம் ஆடினார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் போன்ற சில படங்களில் நடித்தார்.
பட வாய்ப்புகள் குறைவாக இருந்த நிலையில் ஃபால் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் தற்போது ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் நடித்திருக்கிறார். ராம் இயக்கிய கற்றது தமிழ் மற்றும் பேரன்பு உள்ளிட்ட படங்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த அஞ்சலி தற்போது இப்படத்தின் மூல கம்பேக் கொடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிளாக் பாண்டி கவலை:
இந்நிலையில் நடிகர் பிளாக் பாண்டி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஞ்சலியை பற்றி பேசிய அவர், “நானும் அஞ்சலியும் அங்காடித் தெரு படத்துக்கு முன்னதாக ரொம்பவே நெருங்கி பழகினோம். நான் அவரை வாடி போடி என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான பழக்கத்தில் இருந்தோம். நானும் அவரும் ஜெயந்தி மாஸ்டரின் மாணவர்கள். அந்த க்ளாஸில் எனக்கு முன்னாடி அஞ்சலி நடனம் ஆடிக்கொண்டிருப்பார். ஒழுங்காக ஆட சொல்லி கிண்டல் செய்துகொண்டிருப்பேன்.
சில ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் படத்தில் நானும் அஞ்சலியும் ஒன்றாக நடித்த போது தான் மறுபடியும் சந்தித்தேன். ஆனால், அப்போது அஞ்சலி என்னிடம் சரியாக பேசவில்லை.
நானும் அவரிடம் சென்று ஏன் சரியா பேசமாட்ற? நான் எதும் தப்பு பண்ணிட்டேனா? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டேன். அதற்கு அவர், அதெல்லாம் ஒன்னும் இல்லை என்று சொன்னார். பிறகு ஒருநாள் டெக்ஸ்ட் பண்ணேன் அதற்கும் அவர் ரிப்ளை பண்ணல சரி இதில் தவறாக எடுத்துக்க எதுவும் இல்லை. யாரிடம் பேச வேண்டும் பேசக்கூடாது என்பது அவர் அவருடைய தனிப்பட்ட முடிவு. இதுவும் கடந்துபோகும்” என்றார்.