பர்த்மார்க் விமர்சனம்!.. கர்ப்பகாலத்தில் மனைவிக்கு எமனாக மாறும் கணவன்.. என்ன ஆகுது?

By Sarath

Published:

மனைவியின் பேறு காலத்தை சிறப்பாக இயற்கை முறையில் நடத்த வேண்டும் என நினைக்கும் டான்ஸிங் ரோஸாக நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபீர் கல்லரக்கல் ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் மருமகளாக நடித்த மலையாள நடிகை மிர்ணாவை அழைத்துக் கொண்டு பேறு காலம் பார்ப்பதற்காக தனியார் ஏற்படுத்தி உள்ள செயற்கை கிராமத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

1999ம் ஆண்டு நடந்த கார்கில் போருக்கு பின்னர் நாடு திரும்பிய ராணுவ வீரர்கள் ஒருவித மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டனர். ஹீரோ ஷபீருக்கு அப்படியான ஒரு பிரச்சனை இருக்கிறது.

பர்த் மார்க் விமர்சனம்:

ஆனால், அதை பொருட்படுத்தாமல் ரகசியமாக சிகிச்சை செய்துக் கொண்டே தனது மனைவியை இயற்கை முறையில் ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி வாட்டர் பர்த் முறையில் குழந்தையை பெற்றெடுக்க அந்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

இந்த படத்தை இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் 4 அத்தியாயங்களாக விக்ரம் வேதா, கேப்டன் மில்லர் பாணியில் உருவாக்கி உள்ளார்.

மனைவி மீது ஆரம்பத்தில் பாசமாகவும் அன்பாகவும் இருக்கும் ஷபீர் கல்லரக்கல் ஒரு கட்டத்தில் அவளது வயிற்றில் வளரும் குழந்தை நம்முடையது தானா? என்கிற சந்தேக புத்திக்கு ஆளாகிறார்.

அதன் பின்னர் தனது மனைவியின் வயிற்றில் வளரும் கருவை அழிக்க அவர் முயற்சிப்பதும் அதில் இருந்து ஹீரோயின் எப்படி தப்பிக்கிறார். கடைசியில் ஹீரோவின் மன பிரச்சனை சரியானதா? என்பதை செம ட்விஸ்ட் கொண்ட கிளைமேக்ஸ் உடன் முடித்திருக்கின்றனர்.

ஷபீர் கல்லரக்கல் மற்றும் மிர்ணா இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு செம சீட் எட்ஜ் த்ரில்லர் படம் போலவே உள்ளது.

ஆனால், சில இடங்களில் தொய்வும் சில தேவையற்ற காட்சிகளும் வந்து நம்மை சோதிக்காமலும் இல்லை. பாடல்கள், இசை உள்ளிட்டவற்றில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம்.

வித்தியாசமான பட விரும்பிகளுக்கு இந்த படம் பிடிக்குமே தவிர சாமானிய ரசிகர்களை கவருமா என்பது சந்தேகம் தான்.

பர்த் மார்க் – பாஸ் மார்க்!

ரேட்டிங் – 2.5/5