பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் இவர் எந்த ஒரு விசயத்தையும் அதிரடியாக பேசுவதில் வல்லவர், இளையராஜா காப்பிரைட்ஸ், கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட பிரமாண்ட படங்கள் , தயாரிப்பாளருக்கு பிரமாண்ட இயக்குனர்கள் ஏற்படுத்தும் தோல்வி அதனால் தயாரிப்பாளர்கள் படும் வேதனையை எல்லாம் அதிரடி கருத்துக்களாக பொட்டில் அடித்தாற்போல கூறி விடுவார்.
அப்படித்தான் பிகில் படம் மிகப்பெரிய வசூலை செய்தது என வரும் செய்திகள் குறித்து இவர் கருத்து கூறி இருக்கிறார்.
பிகில் படம் பெரும் வெற்றி, வசூல் 200 கோடி வசூல் என்றெல்லாம் பேசி வருகின்றனர் இது தவறாகும்
பெரிய வெற்றியை பிகில் பெறவில்லை ஐந்தாவது நாளே இப்படம் படுத்துவிட்டது என்று தெரிவித்துள்ளார். முதல் இரண்டு நாள் நன்றாக வசூல் ஆனது, நாட்கள் செல்ல செல்ல வசூல் குறைந்து, ஐந்தாவது நாள் படுத்துவிட்டது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், 2019-ஆம் ஆண்டில், நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், பேட்ட ஆகிய திரைப்படங்கள் நல்ல வசூல் பெற்றது என்றும், தற்போது கைதியும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.