பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரை கிட்டத்தட்ட அனைத்து போட்டியாளர்களும் ரவுண்டு கட்டி ஆவேசமாக வார்த்தை போர் நடத்திய நிலையில் அதை திவாகரின் நெருங்கிய தோழி பார்வதி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சற்றுமுன் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில், சூப்பர் டீலக்ஸில் உள்ளவர்கள் மீது எனக்கு உடன்பாடு இல்லை, அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, சாப்பாடு விஷயத்தில் உள்பட எல்லாத்தையுமே ரொம்ப சீப்பாக நடந்து கொள்கிறார்கள் என்று திவாகர் தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சபரிநாதன், சாப்பாடு விஷயத்தில் உனக்கு என்ன சீப்பாக நடந்தது என்று ஆவேசமாக கேட்க, அதற்கு திவாகரன் ஆவேசமாக பதில் அளித்து கொண்டிருந்தார். உடனே பிரவீன், எப்.ஜே உள்பட பலர் திவாகரை ரவுண்டு கட்டி, பொய்யான புகார்களை பிக் பாஸ் இடம் தெரிவிப்பதாகவும், யார் உனக்கு சாப்பாடு விஷயத்தில் கெடுதல் செய்தார்கள் என்றும் கேட்டார்.
திவாகருக்கு ஏதாவது ஒன்று ஒரு பிரச்சனை என்றால் வரிந்து கொண்டு வரும் பார்வதி கூட அமைதியாக உட்கார்ந்து இந்த சண்டையை வேடிக்கை பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் திவாகர் புரமோவில் வரவேண்டும் என்பதற்காக ஏதாவது சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து கொண்டே இருப்பதும், சக போட்டியாளர்களிடம் மொக்கை வாங்குவதும் வழக்கமாகிவிட்ட நிலையில், விஜய் சேதுபதி எத்தனை தடவை அவருக்கு அறிவுரை சொன்னாலும் அவர் திருந்த மாட்டார் என்று பார்வையாளர்களால் விமர்சனம் செய்யப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் அவர் கண்டென்ட் கொடுக்கும் போட்டியாளர்களில் ஒருவர் என்பதால் அவரை வெளியேற்றவும் விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் குழுவினர் விரும்ப மாட்டார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனவே திவாகரின் சர்ச்சைக்குரிய விவாதங்கள் சண்டைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று தான் தெரிய வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
