Biggboss Tamil Season 9: திவாகருக்கு எகிறிய Fanbase.. பாரு அழுதது எல்லாம் நடிப்பா? வச்சு செய்த விஜய் சேதுபதி.. பொத்திண்டு உட்காரு.. கமரூனை கண்டித்த விதம்.. இன்றைய எபிசோடு வேற லெவலில் இருக்கும் போல தெரியுது..!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் இன்றைய எபிசோடில் போட்டியாளர்களின் ‘உண்மையான’ முகத்தை உடைக்கும் கேள்விகளை நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி முன்வைத்தார். இது போட்டியாளர்கள் மத்தியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. “உண்மையா சொல்றவங்க…

bb9 1

பிக் பாஸ் தமிழ் சீசன் 9-ன் இன்றைய எபிசோடில் போட்டியாளர்களின் ‘உண்மையான’ முகத்தை உடைக்கும் கேள்விகளை நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் சேதுபதி முன்வைத்தார். இது போட்டியாளர்கள் மத்தியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

“உண்மையா சொல்றவங்க தெய்வத்துக்குச் சமம்” என்று கூறிய விஜய் சேதுபதி, “வீட்டுக்குள் யாருக்கு ஆதரவு கூடி இருக்கும், யாருக்கு வெறுப்பு கூடி இருக்கும்?” என்ற நேரடி கேள்விகளை தொடுத்தார்.

விஜய் சேதுபதி முதல் கேள்வியைத்தொடுத்தவுடன், வீட்டில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்கள் தயக்கமின்றி ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டனர். வெளியில் திவாகருக்கு கண்டிப்பாக ஃபாலோவர்ஸ், ஃபேன்ஸ் எகிறி இருக்கும் என்று கூறினர்.

சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போட்டியாளர்கள் கூட, திவாகரின் பெயரை ஒருமித்த குரலில் கூறியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. முதல் வாரத்திலேயே திவாகரின் வெளிப்படையான, உணர்ச்சிப்பூர்வமான விளையாட்டு மக்களிடையே வலுவான ஆதரவு அலையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மற்ற போட்டியாளர்கள் ஒப்புக்கொண்டது, திவாகரின் Fanbase எகிறியிருப்பதை உறுதிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

வெளியில் யாருக்கு அதிக ‘ஹேட்’ அல்லது வெறுப்பு இருக்கும் என்ற கேள்விக்கு, கமருதீன் மற்றும் பாரு ஆகியோர் மீது போட்டியாளர்கள் கை காட்டினர். இது இருவருக்கும் மிக பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

பாருவின் மீதுதான் அதிக வெறுப்பு இருக்கும் என்று பலரும் சுட்டிக் காட்டிய நிலையில், நேற்றைய எபிசோடில் அவர் அழுதது எல்லாம் ‘நடிப்பு’ என்று போட்டியாளர்களால் விமர்சிக்கப்பட்டது.

குறிப்பாக, திவாகர் மற்றும் கலையரசன் போன்ற போட்டியாளர்களுடன் பாரு மிக வேகமாக நெருக்கம் காட்டுவது, வெளியில் அவர்களுக்கு இருக்கும் Social Media ஆதரவை பயன்படுத்தி 100 நாள்கள் வீட்டை ஓட்டி விடலாம் என்ற கணக்கில்தான் என்று கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. அவரது பழக்க வழக்கம்போல் எரிச்சலாக இருப்பதாக போட்டியாளர்கள் மட்டுமல்லாமல், பார்வையாளர்களும் கருதுகின்றனர்.

‘ஹேட்’ பட்டியலில் இடம்பெற்ற மற்றொரு போட்டியாளர் கமருதீன். இவரின் ஆக்ரோஷமான மற்றும் வன்முறையை தூண்டும் பேச்சுகள் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளன. கமருதீனின் ’Physical Violence’ நோக்கிச் செல்லும் ஆட்டத்தை கண்டிக்கும் விதமாக, நேற்றைய தினம் அவரை விஜய் சேதுபதி வச்சு செய்திருந்தார். “யாரடா நீ? இங்க உட்கார்! பொத்திண்டு உட்காரு!” என்று கமருதீனை ஒரு மூலையில் அடக்கி உட்கார வைத்தது சூப்பர்.

சண்டை போடுவது, கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது, அடுத்த நாளே “மன்னிச்சிருங்க, I am Sorry” என்று ஒன்றுமறியாத பாப்பா போல் சென்று சாரி கேட்பது என்ற ‘பழைய Formulal’வை கமருதீன் கையாள்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. “இதெல்லாம் பழைய டெக்னிக். புதுசா ஏதாவது யோசிடா!” என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் இவரை கலாய்த்து வருகின்றனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தொகுப்பாளராக விஜய் சேதுபதியின் செயல்பாடுகள், முதல் வார இறுதியிலேயே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நாடகம் ஆடுபவர்களை அவர் எவ்வித ஒளிவுமறைவும் இன்றி நேரடியாக தாக்கிப் பேசுவது, போட்டியாளர்களின் போலித்தனத்தை கிழித்தெறிவது என அவரது பாணி நேர்மையாகவும், சுவாரசியமாகவும் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

மொத்தத்தில் வார இறுதி எபிசோடில் திவாகரின் Fanbase அதிகரித்திருப்பது நியாயமா? கமருதீன் மற்றும் VJ பாருவுக்கு குவியும் ‘ஹேட்’ போக போக மாறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,