பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பம் முதல் பரபரப்பாக இருக்கும் நிலையில் தற்போது அனல் பறக்கிறது. மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், வீட்டில் தற்போது 17 பேர் களத்தில் உள்ளனர். இந்த வாரத்தின் தலைவர் பொறுப்பை கனி ஏற்றுள்ளார்.
இன்றைய நிகழ்ச்சியின் முன்னோட்ட காட்சிகளில், ஒரு டாஸ்க்கின்போது வீடு சலசலப்புடன் காணப்பட்டது. ஜூஸ் தொடர்பான ஒரு டாஸ்க்கில் நடுவர்களாக செயல்பட்ட பார்வதி மற்றும் திவாகருடன் போட்டியாளர் ஆதிரை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிலைமை முற்றியபோது, கலையரசன் கோபத்தில் ஜூஸ் பாட்டில்கள் வைத்திருந்த மேசையை தள்ளி விட்டார்.
இதை பார்த்த தலைவர் கனி நடுவர் பார்வதியை பார்த்து, “சட்டம் தன் கடமையை சரியாக செய்யவில்லை என்றால், வன்முறை வெடிக்கும்!” என்று காட்டமாக கூறி, நிலையின் தீவிரத்தை கூட்டினார்.
இதன் தொடர்ச்சியாக, பிக் பாஸ் வீட்டில் எப்போதும் பிரிக்க முடியாத நண்பர்களாக இருக்கும் பார்வதி மற்றும் திவாகர் இடையே உச்சகட்ட மோதல் வெடித்தது. பார்வதி, “என்னால் இதை செய்ய முடியாது! உனக்காக நான் என்ன பேசினேன் என்று எனக்கு தெரியும். உனக்கு மட்டும் தனியாக சாப்பாடு கொடுக்கிறார்கள். நான் இதில் ஒத்துழைக்க மாட்டேன்!” என்று ஆவேசமாக கத்தினார்.
பதிலுக்குத் திவாகர், “உனக்கு மட்டும் சாப்பாடு கிடைக்கவில்லையா? ஓவரா சீன் போடாதே!” என்று கோபத்துடன் பதிலடி கொடுத்தார்.
மற்றொரு காட்சியில், பார்வதி உடைந்துபோய்க் கண்ணீர் விடுகிறார். “நான் சொல்வது உங்களுக்கு புரியவே மாட்டேன் என்கிறது. நான் யாரையும் நம்பி இங்கு இல்லை. என் கேமை எனக்கு எப்படி விளையாட வேண்டும் என்று தெரியும். சிலர் முதல் வாரத்திலிருந்து செய்யும் ஒரு சில செயல்கள்தான் எனக்கு எரிச்சலூட்டுகிறது” என்று கூறி, தனது மன உளைச்சலை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து வரும் டாஸ்க்குகள் மற்றும் மோதல்களால் பிக் பாஸ் வீடு இந்த வாரம் பெரும் பரபரப்புக்கு சாட்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
