விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியாகி, வீட்டில் நடந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளை உறுதிப்படுத்தியுள்ளது.
வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒட்டப்பட்டிருக்கும் மற்றவர்களின் படங்களை ஓடி சென்று எடுத்துப் பெட்டியில் போடும் ஒரு டாஸ்கில் ஈடுபடுகின்றனர். அதன் பிறகு, பிக் பாஸ் குரல் ஒலித்து, சபரி இந்த வார போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவதாக அறிவிக்கிறது.
சபரி வெளியேறுகிறார் என்று அறிவிக்கப்பட்டதும், சக போட்டியாளர்கள் உற்சாகமாக எழுந்து கைதட்டி கூச்சலிடுகின்றனர். குறிப்பாக பாரு, ‘ஹேய் சபரி வெளியேறிட்டான், சபரி வெளியேறிட்டான்’ என்று குஷியில் ஆட்டம் போடும் காட்சி ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. ஆனால் சபரிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் அவரை அணைத்து ஆறுதல் சொல்கின்றனர். .
ப்ரோமோவின் இறுதியில், “துஷார், கம்ருதீன் – யாருக்கு அடுத்த வாரம் எவிக்ஷனில் இருந்து நாமினேஷன் ஃப்ரீ கிடைக்கப் போகிறது என்பதை முடிவு செய்யப் போகும் ரவுண்டு” என்று பிக் பாஸ் அறிவிப்பதுடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.
‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ பெறுவதற்கான போட்டியில் பங்கேற்க உள்ள துஷார், கம்ரூதின் ஆகிய இருவரில் யார் வெல்வாரோ அவர் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும். அவர் யார் என்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு இரவு 9:30 மணிக்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம்..
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
