பிக் பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில், நாள் 12க்கான புரொமோவில், போட்டியாளர்களான கம்ரூதீன் மற்றும் ரம்யா ஜோ ஆகியோருக்கு இடையே நடந்த கடுமையான வாக்குவாதம் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சீசனின் ஆரம்ப நாட்களிலேயே சண்டைகளும், அதிகார சிக்கல்களும் நிலவி வரும் சூழலில், இந்த சண்டை முக்கியத்துவம் பெறுகிறது.
புரொமோவின் காட்சிகளின்படி, கம்ரூதீன் “நானும் சூப்பர் டீலக்ஸ் இருக்கும்போது இதெல்லாம் பேட் பெர்ஃபார்மர்களுக்கு கொடுத்திருக்காங்க, ஓட் பண்ணிருக்காங்க…” என்று ரம்யா ஜோவின் ஆட்ட முறையை விமர்சிக்கிறார்.
ரம்யா ஜோ: “என்னோட கேமை நான் ஆடுறேன் விடுங்க. உங்களுக்கு என்ன புடிக்கலைன்னா பேசாதீங்க.” என்று ஆவேசமாக பதிலளிக்கிறார். அவர அண்ணான்னு கூப்பிட்டல்ல என்ட்ட ஒரு செருப்பக்கழட்டி நானே அடிக்கனும்,” என்று ரம்யா ஜோ சொல்ல, அதற்கு கம்ருதீன் ’ஹே’ என மிரட்ட, உடனே ரம்யா ஜோ “நீ சம்பந்தமே இல்லாம அண்ணான்னு கூப்பிட்ட தெரியுமா?” என்று கூறுகிறார்.
அதற்கு கம்ரூதீன் “எனக்கு ஃபேக்கா சொன்ன மாதிரி இருந்ததுமா.” என்று ரம்யா ஜோவின் அணுகுமுறையில் நேர்மை இல்லை என்று குற்றம் சாட்டுகிறார். உடனே ரம்யா ஜோ “நான் ஃபேக்காதான் இருந்துக்கிறேன். உங்ககிட்ட ட்ரூவா இருந்து எனக்கு என்ன வரப்போகுது? நீ யாரு எனக்கு?” என்று கம்ரூதீனை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார்.
அதற்கு கம்ருதீன் ‘நீ பேக்குன்னு எனக்கு தெரியும் என்று சொல்ல, ஆத்திரம் தாங்காமல், கம்ரூதீனை நோக்கி, “எனக்கும் தெரியும் நீ சொல்லாதே! நீ ஃபேக்னு எனக்கு தெரியும்! நீ சொல்லாதே!” என்று ரம்யா ஜோ சத்தம் போடுகிறார்.
இந்த வாக்குவாதம் எதனால் எழுந்தது என்று தலையும் வாலும் புரியவில்லை என்றாலும் இன்றைய எபிசோடில் கம்ரூதீன் – ரம்யா சண்டை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
