Biggboss Tamil Season 9: நீ யாரு என்னை கேள்வி கேட்க? கெமியை மிரட்டிய திவாகர்.. நீ வாட்டர் மெலன் ஸ்டாரா இருந்துக்கோ இல்லை யாரா வேணும்னாலும் இருந்துக்க.. பதிலடி கொடுத்த கெமி.. கைய நீட்டி பேசுற வேலை வச்சுக்காத.. பிரவீன்ராஜை முறைத்த திவாகர்.. என்னடா முதல் நாளே சண்டை வந்துருச்சு..!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. பொதுவாக, இந்த நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களிலும் முதல் ஒரு வாரம் போட்டியாளர்களிடையே ஒரு சகஜமான நிலை…

bb9

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்று 20 போட்டியாளர்களுடன் தொடங்கியது. பொதுவாக, இந்த நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களிலும் முதல் ஒரு வாரம் போட்டியாளர்களிடையே ஒரு சகஜமான நிலை நிலவும்; இரண்டாவது வாரத்தில்தான் சண்டைகள் தீவிரமாகும் என்பது பார்வையாளர்கள் அறிந்த ஒன்று. ஆனால், இந்த சீசனில் முதல் நாளே சண்டை வெடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் நேற்றிரவு பிரவீன் ராஜ் மற்றும் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர் ஆகிய இருவருக்கும் இடையே குறட்டை சத்தம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. “நீதான் குறட்டை விடுகிறாய்” என்று மாறி மாறி இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டால் ஏற்பட்ட வாக்குவாதம், முதல் நாளே வீட்டில் சலசலப்பை உருவாக்கியது.

குறட்டை சத்தத்தால் ஏற்பட்ட சலசலப்பை பார்த்து அங்கு வந்த போட்டியாளர் கெமி, “அமைதியாகப் பேசுங்கள்” என்று அறிவுறுத்தினார். அதற்கு ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர், “நீ யார், என்னிடம் அமைதியாக பேசச் சொல்வதற்கு?” என்று எதிர்க் கேள்வி எழுப்பினார். இதையடுத்து இருவருக்கும் இடையே நேரடி மோதல் வெடித்தது:

கெமி: “நான் கெமி. நான் அப்படித்தான் கேட்பேன்.”

திவாகர்: “நான் வாட்டர் மெலன் ஸ்டார்.”

கெமி: “நீ என்ன ஸ்டாராக இருந்தாலும் இரு. நான் கேள்வி கேட்பேன்!”

என்று கெவின் பதிலடி கொடுக்க, இருவருக்கும் இடையே கடுமையான மற்றும் பரபரப்பான வாக்குவாதம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து, ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகருக்கும், மற்றொரு போட்டியாளரான காம்ருதின் என்பவருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் நிகழ்ந்தது. அப்போது திவாகர், காம்ருதினைப் பார்த்து “நீ ரொம்ப சீன் போடாதே!” என்று கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த காம்ருதின், “சீன்’ போடும் அளவுக்கு எல்லாம் நீங்க பெரிய ஆள் இல்லை” என்று கூறினார்.

சின்ன பையன் போலப் பேசக்கூடாது என்று கூறிய திவாகர், “நான் ஒன்றும் அவ்வளவு வயதானவன் இல்லை. உங்களைவிட நாலைந்து வயதுதான் அதிகம்” என்று சமாளிக்கும் வகையில் பதிலளித்தார்.

இந்த சண்டைகளுக்கு மத்தியில், “இந்த போட்டிக்கு தகுதி இல்லாதவர்கள் என இரண்டு பேரை தேர்வு செய்யவும்” எனப் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கோரிக்கை விடுத்தார். இதற்குப்பெரும்பாலான போட்டியாளர்கள் ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகரையும் தேர்வு செய்தனர். இன்னொரு போட்டியாளராக வியானா தகுதியில்லாதவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேர்வான இருவரில் யார் முதல் நாளே வெளியேற்றப்படுவார்கள்? அல்லது இருவருமே வெளியேறுவார்களா என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும். மொத்தத்தில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தனது முதல் நாளே விறுவிறுப்பான மற்றும் மோதல் நிறைந்த கட்டத்தை எட்டிவிட்டதாகத் தெரிகிறது.