விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் வீட்டில் நேற்று 15வது நாளில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தற்போது பார்ப்போம்.
தீபாவளி தினம் என்பதால் நேற்று போட்டியாளர்களுக்குள் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கும் நிகழ்வு நடைபெற்றது, இது சில புதிய நெருக்கமான அல்லது கேலிக்குரிய தருணங்களை உருவாக்கியது. விஜய் சேதுபதி வீட்டில் இருந்து போட்டியாளர்களுக்கு சிறப்பு இரவு உணவு வந்தது. யார் யார் மனதில் யாருக்கு என்ன இடம் இருக்கிறது என்பதை உடைத்து பேசும் நாமினேஷன் நடந்தது. திவாகருக்கும் வினோத்துக்கும் இடையே பெரிய சண்டை ஏற்பட்டது. அதன்பின் இரண்டு வீடுகளுக்கு இடையே ஆட்களை மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. கடைசியாக ஃபைசன் டீம் உள்ளே வந்ததுடன் நாள் நிறைவடைந்தது.
காலைப்பொழுதில் எண்ணெய் தேய்த்து குளியல் நிகழ்ந்தது. பாரு, திவாகருக்கு எண்ணெய் தேய்க்க, கமருதீன் பாருக்கு தேய்த்தார். இதில், சபரி, எஃப்.ஜே.க்கு மிகவும் சூப்பரான கேரளா ஸ்டைல் மசாஜ் கொடுத்தது கவனிக்கத்தக்கது. அதேபோல், வினோத், வியன்னாவுக்கு மசாஜ் கொடுத்தது அதிக கவனம் பெற்றது. வினோத், வியன்னா மீது சற்று அக்கறை செலுத்துவது போல தெரிந்தது.
திவாகருக்கும் வினோத்துக்கும் இடையேயான மோதல் அன்றைய நிகழ்ச்சியின் உச்சமாக இருந்தது. சமையலறை பொருட்களை எடுத்து செல்வது தொடர்பாக வினோத், திவாகரை கேலி செய்தார். அப்போது வியன்னா அழுதுகொண்டிருந்ததால், வினோத் இன்னும் ஆத்திரமடைந்தார். வினோத் கேலி செய்த போது, திவாகரால் சரியான வார்த்தைகளை பேச முடியாமல் தடுமாறினார். அவருக்கு பேச்சு வரவில்லை என்றாலே அவர் கத்த ஆரம்பித்துவிடுகிறார் என்று தெரிகிறது.
வினோத், திவாகரை நோக்கி, “உனக்கு நடிக்கவே தெரியல, உனக்கு பேச தெரியல” என்று நேரடியாக சாடியது, தன்னை ‘நடிப்பு ராட்சசன்’ போல காட்டிக்கொள்ளும் திவாகரை மிகவும் ட்ரிகர் செய்தது.
அதேபோல் கமருதீன், துஷாருடன் பேசும்போது, அரோராவை “மோசமான பெண், அடிக்கடி ஆட்களை மாற்றுபவர், உஷாராக இரு” என்று கூறினார். துஷார் இதை கேட்டவுடன், நேராக அரோராவிடம் சென்று அதை பற்றி கேட்கிறார். இதனால் அரோரா மனம் உடைந்து அழ ஆரம்பித்தார்.
அரோராவுடன் துஷார் பேச சென்றது, உண்மையில் துஷார் அரோரா மீது கொண்ட அக்கறையல்ல, மாறாக துஷாரின் பழிவாங்கும் செயல் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது.
கனி, வீட்டு தலைவராகப் பொறுப்பேற்றவுடன், காலையில் சீக்கிரம் எழுந்து வருவது கட்டாயம் என்று புதிய விதிகளை கொண்டுவந்தார். சலுகை கிடைக்கிறது என்பதற்காக பலர் குறிப்பாக சுபிக்ஷா மற்றும் ரம்யா தாமதமாக தூங்குவது, தாமதமாக தூங்கி எழுவது, பிக் பாஸ் வீட்டின் ரூல்ஸ்களை மதிக்காதது பற்றி ஆதிரை கோபமாக குரல் கொடுத்தார். ஆதிரை, சுபிக்ஷாவை “விளையாடவே மாட்டேங்குறாங்க” என்று நாமினேஷன் பாயிண்டாக பயன்படுத்தினார். அதன் பின் நடந்த டாஸ்க்கின் முடிவில், எம்.ஜே மற்றும் திவாகருக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைத்தது.
இந்த வார நாமினேஷன்: கமருதீன், ஆதிரை, அரோரா உள்ளிட்டோர் நாமினேஷன் பட்டியலில் வந்தனர். கமருதீன், ஆதிரை மீது “டிஸ்ரெஸ்பெக்ட்டாக பேசுகிறார்” என்று சொல்லி நாமினேட் செய்தார். இந்த வார இறுதியில் யார் எவிக்சன் ஆகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
