Biggboss Tamil Season 9: போட்டியாளர்கள் எல்லாம் மொக்கை தான்.. ஆனால் பார்வையாளர்கள் எண்ணிக்கையில் சாதனை.. முதல் நாளில் மட்டும் 7.8 கோடி வாட்ச் டைம்.. என்ன ஒரு அதிசயம்..

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9, இந்த ஆண்டு முந்தைய சீசன்களை காட்டிலும் மாபெரும் வரவேற்புடன் தொடங்கியுள்ளது. பிரபலமான யாருமே போட்டியாளர்களாக இல்லாத நிலையில் இந்த வரவேற்பு பெரும்…

biggboss

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9, இந்த ஆண்டு முந்தைய சீசன்களை காட்டிலும் மாபெரும் வரவேற்புடன் தொடங்கியுள்ளது. பிரபலமான யாருமே போட்டியாளர்களாக இல்லாத நிலையில் இந்த வரவேற்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீசன் அதன் ஆரம்ப நாளே மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் நாள் எபிசோட், மொத்தமாக 7.8 கோடி நிமிடங்கள் வாட்ச் டைமை எட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த சீசனின் முதல் நாள் வரவேற்புடன் ஒப்பிடுகையில், 1.74 மடங்கு அதிகமான பார்வையாளர்களை சென்றடைந்துள்ளதை காட்டுகிறது.

மேலும், இந்த சீசனின் ஆரம்ப நாள் பார்க்கும் நேரத்தில் கிட்டத்தட்ட 47% தொலைக்காட்சிகள் மூலமாக பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ் பார்வையாளர்கள், வீட்டில் உள்ள தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் அனுபவத்தை பெற்றுள்ளார்கள் என்பது தெரிய வருகிறது.

பார்வையாளர்களை மேலும் கவரும் வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் பல புதிய அம்சங்களை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக 24×7 நேரலை மற்றும் ரசிகர்கள் நிகழ்ச்சியின் போது நடக்கும் நிகழ்வுகளை பற்றித் தங்களது கருத்துகளையும் உணர்வுகளையும் உடனடியாக பகிர்ந்துகொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் ரசிகர்கள் குழுவாக இணைந்து, தங்கள் விருப்பமான போட்டியாளர்களை பற்றி விவாதிக்கவும், நிகழ்ச்சி குறித்த ஆர்வத்தை வெளிப்படுத்தவும் தனி இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மோம் தி மொமன்ட் என்ற ஒரு அம்சம் தமிழ் உள்ளடக்கத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையாளர்கள் நிகழ்ச்சியின் வேடிக்கையான அல்லது முக்கியமான தருணங்களை உடனடியாக ‘மீம்களாக’ உருவாக்கி, சமூக ஊடகங்களில் பகிர்ந்து, எதிர்வினையாற்றவும் முடியும். இது ரசிகர்களின் பங்கேற்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

இந்த வலுவான துவக்கம் குறித்துப் பேசிய, ஜியோ ஸ்டார் பொழுதுபோக்கு பிரிவின் தலைவர் கிருஷ்ணன் குட்டி, “பொழுதுபோக்கின் எதிர்காலம், வெறும் காட்சிகளை காண்பிப்பதில் இல்லை, மாறாக சிறப்பான அனுபவங்களை உருவாக்குவதில்தான் உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் எப்படி பார்வையாளர்களின் ஈடுபாட்டை முழுவதுமாக மாற்றியமைக்க முடியும் என்பதற்கு இந்த சீசன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ரசிகர்கள் தங்கள் அனுபவங்களை செதுக்க, பகிர மற்றும் தொடர்புகொள்ள அனுமதிக்கும் தனித்துவமான அம்சங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஒரு புதிய தரத்தை நாங்கள் வெற்றிகரமாக நிர்ணயித்துள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.