Biggboss Tamil 9: ஒரே ஒரு கேள்வி தான்.. பாருவை கதற கதற அழவைத்த விஜய்சேதுபதி.. இதுவும் கண்டெண்ட் தானா? எல்லாமே நடிப்பா கோபால்? வேலைவெட்டியை போட்டுவிட்டு பார்க்கும் மக்கள் தான் முட்டாள்களா? என்னங்கடா போங்காட்டம்..

பிக் பாஸ் சீசன் 9 தமிழில், முதல் நாளில் இருந்தே அதிகம் கவனம் ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவரான பாரு, வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி எழுப்பிய கேள்விகளால் மனம் உடைந்து அழுத சம்பவம்…

paru

பிக் பாஸ் சீசன் 9 தமிழில், முதல் நாளில் இருந்தே அதிகம் கவனம் ஈர்த்த போட்டியாளர்களில் ஒருவரான பாரு, வார இறுதியில் நடிகர் விஜய் சேதுபதி எழுப்பிய கேள்விகளால் மனம் உடைந்து அழுத சம்பவம் சமூக ஊடகங்களில் விவாத பொருளாகியுள்ளது.

மதுரைக்கார பொண்ணுன்னாலே கெத்துன்னு சொல்லுவாங்க, அப்படிப்பட்ட ஒரு பொண்ணை விஜய் சேதுபதி சொன்ன ஒரே ஒரு வார்த்தையால் கதற கதற அழ வச்சிட்டாரே என்று ஒரு தரப்பு ரசிகர்கள் பாருவுக்கு கலாய்க்க, மறுபுறம் இதுவும் ஃபைனலிஸ்ட் ஆவதற்கான ஒரு நாடகம் என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.

இன்றைய எபிசோடில் விஜய் சேதுபதி அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு டாஸ்க்கை கொடுத்தார். அந்த டாஸ்க்கில், வீட்டிற்குள் யார் ‘வேற லெவலில் நடிக்கிறார்கள்’ என்ற கேள்வியை முன்வைத்தார்.

போட்டியாளர்கள் அனைவரும் ஒருமனதாக சில நபர்களை கைகாட்டி, அவர்கள்தான் அதிக நாடகங்களை அரங்கேற்றுவதாக குறிப்பிட்டனர். அதில் பாரு மற்றும் ஆதிரை ஆகிய இருவர் மீதுதான் அதிகப் பார்வைகள் திரும்பின. இதை கவனித்த பாரு, மற்றவர்கள் தன்னை குறிவைப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

விஜய் சேதுபதி, “பாரு, நீங்கள் நடிப்பதாக எல்லாரும் சொல்கிறார்களே, உங்களுக்கு ‘சிறந்த நடிப்பிற்கான விருது’ கொடுக்கலாமா?” என்ற தொனியில் கேள்வி எழுப்பியதாக புரமோ வீடியோவில் உள்ளது.

இந்த கேள்வியால் மனம் உடைந்த பாரு, “நான் இவ்வளவு தத்ரூபமாக பங்கெடுத்து, என் உணர்வுகளை வெளிப்படுத்தினால், அதை எல்லாரும் நடிப்பு என்று சொல்கிறார்களே, இது எந்த விதத்தில் நியாயம்?” என்று கூறி, உடைந்துபோய் அழ ஆரம்பித்தார்.

நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் ஒரு பிரிவினர், பாருவின் இந்த அழுகையை பார்த்து, “இப்படிப்பட்ட அப்பாவி பெண்ணை அழ வைப்பது சரியல்ல” என்று அனுதாபத்தின் அடிப்படையில் அவருக்கு வாக்களிக்க தயாராகின்றனர்.

அவருடைய ஒவ்வொரு கண்ணீர் துளிகளுக்கும் அவரை நடிப்பு என குற்றஞ்சாட்டிய வீட்டில் உள்ளோர் பதில் சொல்லியே ஆக வேண்டும். அந்த கண்ணீர் துளிகள் பல லட்சம் வாக்குகளாக மாறி, பாருவை ஃபைனலிஸ்ட் வரைக்கும் கொண்டு செல்லும்” என்று பாருவின் ஆர்மி படையினர் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில், ஒரு சில விமர்சகர்கள் இது பிக் பாஸ் குழுவின் திட்டமிட்ட வியூகம் என்று கருதுகின்றனர்.

பாரு மற்றும் ஆதிரை மீது கடந்த ஒரு வார காலமாக பார்வையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு அலை இருந்தது உண்மை. இந்த எதிர்ப்பை தணித்து, அவர்களை இறுதி போட்டிக்கு தயார்படுத்தும் வகையில், பிக் பாஸ் குழுவே இந்த சண்டைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், அதற்கு விஜய்சேதுபதியும் உதவியிருக்கலாம் என்றும், அதன் விளைவாக ஏற்பட்ட அழுகை ஒரு அனுதாப அலை நாடகத்தையும் அரங்கேற்றியிருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

விஜய் சேதுபதி போன்ற ஒரு நடுவரை வைத்து, போட்டியாளர்களின் நடிப்பை வெளிப்படையாக விமர்சிப்பதன் மூலம், அவர்களுக்கு அனுதாப வாக்குகளை பெற்று தருவது பிக் பாஸ் குழுவின் உத்தியா? அல்லது கேவலமான செயலா? என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்.