Biggboss Tamil 9, Day 8: திவாகருக்கு அரோரா கொடுத்த முத்தம்.. மச்சம் உள்ள ஆளுய்யா.. கனி இப்படி செய்யலாமா, உங்க மேல உள்ள மரியாதையே போயிருச்சு.. நாமினேஷனில் பரபரப்பு.. சூப்பர் டீலக்ஸ் வீட்டில் பார்வதி.. பாருவின் ஆட்டம் இனி ஆரம்பமாகுமா?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் 8ஆம் நாள் எபிசோடில் என்னென்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். நேற்றைய நாளில் 6 முக்கிய நிகழ்வுகள் நடந்தன. அவை இதோ:…

BB Day 8

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் 8ஆம் நாள் எபிசோடில் என்னென்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம். நேற்றைய நாளில் 6 முக்கிய நிகழ்வுகள் நடந்தன. அவை இதோ:

1. சாப்பாட்டுப் போர்: ‘சூப்பர் டீலக்ஸ்’ டீம் vs ‘பிக் பாஸ்’ டீம்.

2. அரோரா & திவாகர்: அரோராவிடம் திவாகருக்கு கிடைத்த முத்தம்.

3. ஜக்குஸி குழியல் விவகாரம்: அரோரா, துஷார், கமருதீன் & வினோத்தின் பார்வை.

4. நாமினேஷன் மற்றும் ஸ்வாப்: வியன்னாவுக்கு கிடைத்த விலக்கு மற்றும் அணிகளின் மாற்றம்.

5. FJ Vs பார்வதி: சபையில் நாகரீகமற்ற நடத்தை.

6. கேப்டன் துஷாரின் சறுக்கல்.

நேற்று காலையில் அலாரம் அடித்தும், ‘பிக் பாஸ்’ டீம் 8:50 மணி வரை எழுந்து வரவில்லை. அவர்கள் தாமதமாக வருவதால், ‘சூப்பர் டீலக்ஸ்’ டீமிற்கு எரிச்சல் ஏற்படுகிறது. ஆனால், சூப்பர் டீலக்ஸ் டீம் உணவை தாமதப்படுத்துவதற்கு பதிலாக, ஏற்கனவே இருந்த உணவில் தண்ணீர் ஊற்றி பழைய சோறு போல் சாப்பிடலாம் என்று முடிவெடுக்கிறது.

பசி என்றால் என்னவென்று தெரிய வேண்டும் என்பதற்காக கனி, இருந்த உணவில் மொத்தமாக உப்பை கொட்டி விடுகிறார். ஆனால் இது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். ‘பிக் பாஸ்’ டீம் வேலையை சரியாகச் செய்யவில்லை என்றால், நீங்கள் உணவை தாமதப்படுத்தலாம், கூடுதல் வேலைகளை வாங்கலாம். ஆனால், இருக்கும் நல்ல உணவில் உப்பை கொட்டி அதை வீணாக்குவது நியாயமில்லை. வேலை செய்பவர்கள் அடிமைகள் அல்ல, அவர்கள் சாப்பிட்டால்தான் உங்களுக்கு வேலை நடக்கும் என்ற அடிப்படை புரிதல் சூப்பர் டீலக்ஸ் டீமிற்கு இல்லை. கனியிடம் இருந்து இப்படி ஒரு செயலை எதிர்பார்க்கவில்லை.

அடுத்ததாக கேப்டனாக இருந்த துஷார், இந்த குழப்பம் தினசரி தொடரக் கூடாது என்று எந்தவொரு வலுவான நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. உணவை பாழாக்கியபோது கூட, அதை சுத்தம் செய்ய சொல்லவில்லை. ஒரு லீடருக்கான பண்பு இவரிடம் இல்லை.

டாஸ்க்கில் ஒருவர் நடிப்பதை ஏற்கும் இடத்தில்கூட, FJ நடத்தை மிக மோசமாக இருந்தது. பார்வதி நடிக்க வரும்போது, அவர் நடுவே சத்தம் போட்டுக்கொண்டு, “இப்படி கெட்ட பேர் வாங்கத்தான் நான் வந்திருக்கேன்” என்று ஒரு பிளேட் போடுவது சபை நாகரீகமற்ற செயல்.

ஒரு விஷயம் சரியில்லை என்றால், கோர்வையாக, சரியான நேரத்தில் பேச வேண்டும். ஒரு பெர்ஃபாமன்ஸ் நடக்கும்போது, வேண்டுமென்றே அதை தடுப்பது அல்லது கவனத்தை திசை திருப்புவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் சண்டை சச்சரவு தேவை என்றாலும், அது ஒரு தரமான தளத்தில் இருக்க வேண்டும்.

அரோரா, “உனக்கு இதெல்லாம் செஞ்சா போதுமா?” என்று கேட்டு, திவாகர் முகத்தில் கையை தடவுவது, பின்னர் கிஸ் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். அரோரா முத்தம் கொடுத்ததில் திவாகர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். “அரோரா கிட்ட இருந்து கிஸ் வாங்கிட்டேன், நான் எஸ் டீம்க்கு தான் சப்போர்ட் பண்ணுவேன்” என்று பேசுவது அவர் கற்பனையில் வாழ்கிறார் என்பதை காட்டுகிறது.

பிக் பாஸ் டீம் வெற்றி பெற்றால் ஸ்வாப் உண்டு என்ற கண்டிஷனுடன் நடிப்பு டாஸ்க் நடத்தப்பட்டது. கமருதீனின் ஆக்டிங் ஸ்கில் தெரிந்து பிக் பாஸ் இதை வைத்திருக்கலாம். சபரி மற்றும் விக்ரம் ஆகியோர் சிறப்பாக நடித்தனர். சபரிக்கு 3.5 மார்க் கொடுத்தாலும், அவர் உண்மையிலேயே தனது பெஸ்ட்டை கொடுத்தார்.

வியன்னாவுக்கு நாமினேஷனில் இருந்து விலக்கு கிடைத்தது. அதேபோல் சூப்பர் டீலக்ஸ் வீட்டுக்கு பார்வதி, திவாகர், ஆதிரை சென்றுள்ளனர். பிக் பாஸ் வீட்டுக்கு அரோரா, கமருதீன் சென்றுள்ளனர்.

நேற்றைய நாமினேஷன் படலத்தில் கலையரசன், திவாகரை நாமினேட் செய்து, “லூசு மாதிரி பேசிட்டு இருக்காரு” என்று வெளிப்படையாக பேசியது அவரது முதிர்ச்சியை காட்டியது. நாமினேஷனில் இல்லாதவர்கள் பேச கூடாது என்று திவாகர் குறுக்கிட, ரம்யா அதை கடுமையாக எதிர்த்து, “உங்களுக்கு என்னவோ பேசுங்க, பார்வதிக்காக நீங்க பேசாதீங்க, அவங்களுக்கு வாய் இருக்கு அவங்க பேசுவாங்க” என்று பதிலடி கொடுத்தார். திவாகருக்கு ரம்யாவின் மீது கோபம் இருப்பதை இது மீண்டும் நிரூபித்தது.

நேற்றைய எபிசோடில் பெரும்பாலும் அடிப்படை புரிதல் இல்லாத, எரிச்சலூட்டும் சண்டைகள் நிறைந்த நாளாகவே இருந்தது. கேப்டன் துஷார், உணவு குழப்பத்தை நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது பெரும் சறுக்கல். FJ போன்றோர் வேண்டுமென்றே கவனத்தை ஈர்க்கும் விதமாக, நாகரீகமற்ற செயல்களில் ஈடுபட்டனர். இது கண்டென்ட் மட்டுமே என்றாலும், சில சமயம் பார்வையாளர்களை எரிச்சலூட்டுகிறது. மொத்தத்தில் பார்வையாளர்களுக்கு திருப்திகரமான ஒரு எபிசோடாக நேற்று இல்லை.