Bigg Boss Tamil Season 8 Day 98: விளையாட்டை திருப்பியதாக ரவீந்தரை கூறிய விஜய் சேதுபதி… தீபக்கின் எவிக்ஷனால் கொந்தளித்த ரசிகர்கள்…

Bigg Boss Tamil Season 8 Day 98 இல் விஜய் சேதுபதி எபிசோடு ஆரம்பித்ததும் முன்னாள் போட்டியாளர்களிடம் தான் பேசினார். மற்ற சீசன்களில் இல்லாமல் இந்த சீசனில் முன்னாள் போட்டியாளர்கள் இரண்டாவது ஏன்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 98 இல் விஜய் சேதுபதி எபிசோடு ஆரம்பித்ததும் முன்னாள் போட்டியாளர்களிடம் தான் பேசினார். மற்ற சீசன்களில் இல்லாமல் இந்த சீசனில் முன்னாள் போட்டியாளர்கள் இரண்டாவது ஏன் உள்ளே வந்தோம் என்று நினைக்கும் அளவிற்கு அவர் பல கேள்விகளை கேட்டார். அவர்களும் அதேபோல் தான் நடந்து கொண்டார்கள். நீங்க வெளியே இருந்து பாத்துட்டு வந்து சொல்றேன் என்ற பேர்ல உங்க மைண்ட்ல இருக்க சிந்தனைகளை சொல்லி உள்ள இருக்க எட்டு பேரின் கான்ஃபிடன்ஸைடைக்கிறீங்க என்று விஜய் சேதுபதி கூறினார்.

bb

அடுத்ததாக விஜய் சேதுபதிவீந்தரை வச்சு செய்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரிடமும் நீ பணப்பெட்டி எடுக்கறியா அவர் பணப்பெட்டி எடுக்கிறாரானு எதுக்கு நீங்க பிரைன் வாஷ் பண்ணீங்க நீங்க செய்கிற செயல் கேமையே திசை திருப்புகிறது விளையாட்டை மாற்றுகிறது என்று ரவீந்தரை பல கேள்விகளை கேட்டுவிட்டார். ரவீந்திருக்கு ஒரு கட்டத்தில் பதில் சொல்ல முடியாமல் கண்கலங்கி விட்டார்.

அதற்கு அடுத்ததாக யாருமே எதிர்பாராதது தீபக் எவிக்ஷன் ஆகிவிட்டார். இதனால் ரசிகர்கள் பெரிதும் கொந்தளித்து விட்டனர். தீபக் இவ்வளவு நாளாக நன்றாக விளையாடினாரே அவரை எப்படி வெளியேற்றினீர்கள் என்று சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் எழுந்தது. ஒரு சிலர் ஒவ்வொரு சீசன்களிலும் ஏதாவது ஒரு Unfair Eviction நடைபெறும். அது போல தான் இந்த சீசனிலும் தீபக்கை Unfair ஆக எலிமினேட் செய்திருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

bb 1

தீபக் வெளியேறும் போது முத்துக்குமார் மிகவும் உடைந்து அழுதுவிட்டார். நெடுநேரம் தீபக்கை பற்றியே நினைத்துக் கொண்டு பேசிக்கொண்டிருந்தார் முத்துக்குமரன். தீபக்கை பிக் பாஸும் நிறைய அன்பு வார்த்தைகள் கூறி நீங்கள் தான் சிறந்த கேப்டன் உங்கள் மகனுக்கு நீங்கள் சிறந்த தந்தை என பல பாராட்டுகளை கூறி வெளியே அனுப்பி வைத்தார். விஜய் சேதுபதியும் தீபக்கை பாராட்டினார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.