Bigg Boss Tamil Season 8 Day 97 இல் விஜய் சேதுபதி எபிசோடு தொடங்கியது. தொடங்கியதும் வெளியே இருந்து வந்த போட்டியாளர்கள் உள்ளே எதற்கு வந்தார்கள் என்ற கேள்வியை தான் முதலில் கேட்டார். அப்போது ஒவ்வொருவராக முதலில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் இந்த இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வந்தோம் என்று கூறினார்கள்.
ஆனால் விஜய் சேதுபதி நீங்கள் செய்தது எல்லாமே அவர்களின் மீது வன்மத்தை கக்குவது போல் தான் இருந்தது. நீங்கள் உங்களை வெளிப்படுத்தி காட்டுவதை தவிர மற்றவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று அவர்களது தவறுகளை சுட்டி காட்டினார். இதைப் பற்றி உள்ளே இருந்த எட்டு போட்டியாளர்களிடம் கேட்டார். அவர்களும் அப்படித்தான் கூறினார்கள்.
அவர்கள் வெளியே இருந்து வந்ததும் எங்களுக்கு ரொம்ப பயமாகத்தான் இருந்தது. ஏனென்றால் ஆளாளுக்கு எங்களை கூப்பிட்டு மூளை சலவை செய்வது போல் பேசினார்கள். நாங்க எப்படி இந்த இடத்துல இருக்கலாம் அப்படிங்கற மாதிரி இப்ப ரொம்ப ஒரு டாக்சிக்கா பேசுற மாதிரி இருந்தது என்று எல்லோரும் கூறினார்கள்.
அடுத்ததாக சுனிதா சௌந்தர்யா பிஆர் வைத்ததால தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்ற கருத்தை கூறினார். அதற்கு எதிராக விஜய் சேதுபதி பேசினார். நீங்கள் இப்படி நினைப்பது தவறு சுனிதா ஏனென்றால் என்னதான் பிஆர் வைத்திருந்தாலும் அவர்களிடம் தனித்தன்மை இருப்பதால்தான் மக்கள் ஓட்டு போட்டு அவர்களை வைத்திருக்கிறார்கள். நான் மக்களை நம்புகிறேன் நீங்கள் வெளியே போனது எங்களுக்கு எல்லோருக்கும் வருத்தம் தான்.
சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, மஞ்சரி ஆகியோர் நன்றாக பேசுவார்களே அவர்களது thoughts எல்லாம் நன்றாக இருக்குமே அவர்கள் எதுக்கு வெளியே சென்றார்கள் என்று நாங்கள் வருத்தப்பட்டு இருக்கிறோம். ஆனால் எல்லாமே மக்களுடைய முடிவு தான் என்று அழுத்தம் திருத்தமாக விஜய் சேதுபதி கூறினார். அடுத்ததாக எவிக்சன் ப்ராசஸ் நடந்தது. யாரும் எதிர்பாராத விதமாக அருண் வெளியேற்றப்பட்டார். ஆனால் அருண் செல்லும்போது அனைவரிடம் நன்றாக பேசி சென்றார் வெளியே வந்து எல்லோரும் இதே நட்போடு இருக்கலாம் என்று கூறினார்.
விஷால் தான் கொஞ்சம் உடைந்து அழுதுவிட்டார். ஆனாலும் இந்த பிக் பாஸ் பயணம் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தந்தது என்று விஜய் சேதுபதி அவர்களிடம் கூறிவிட்டு மகிழ்வுடன் வெளியே சென்றார். இனி அடுத்த எபிசோடில் எதைப்பற்றி விஜய் சேதுபதி விவாதிப்பார் என்பதை காண ஆவலாக இருக்கிறது. அதோடு தீபக் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.