Bigg Boss Tamil Season 8 Day 94 இல் வெளியே இருந்து வந்த முன்னாள் போட்டியாளர்களான ரவீந்தர், சாச்சனா, சிவகுமார் போன்றோர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு தகவல்களை கூறி குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் முத்துக்குமரன் ஜாக்குலின் தீபக் போன்றவர்கள் தெளிவாகத்தான் இருப்பது போல் தெரிகிறது. இதில் பிக்பாஸே ஒரு இடத்தில் கடுப்பாகி ரவித்திரை கண்பெக்ஷன் ரூமுக்கு அழைத்து வெளியில் இருக்கும் ஓட்டு சம்பந்தமான தகவல்களை உள்ளே சொல்லக்கூடாது என்று தானே கூறியிருந்தோம். நீங்கள் எதற்கு சொன்னீர்கள் என்று கண்டித்தார்.
அதற்கு அடுத்ததாக லிவிங் ஏரியாவில் வைத்து சாச்சனா, சிவக்குமார், வர்ஷினி, ரியா ஆகியோரையும் நிக்க வைத்து வெளியில் இருக்கும் சொல்லக்கூடாத தகவல்களை ஏன் சொன்னீர்கள் என்று அனைவரும் முன்னிலையிலும் பிக் பாஸ் கேட்டுவிட்டார். நீங்கள் இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் கூறிவிட்டார். நீங்கள் இப்படி செய்வதால் உள்ளே இத்தனை வாரங்கள் இருந்து தங்களது உழைப்பை போட்ட ஹவுஸ்மேட்ஸ் என்ன நினைப்பார்கள் என்று நினைத்து பார்த்தீர்களா என்று கேட்டார்.
இதையெல்லாம் முடிந்ததற்கு பிறகு ஆடிய ஆட்டம் என்ன என்ற டாஸ்க் அறிவித்தார் பிக் பாஸ். அதாவது எல்லா சீசன்களிலும் நடைபெறுவது போலவே ஒவ்வொரு படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களை ஒவ்வொருவருக்கு கொடுத்திருந்தார்கள். அதில் முதலாவதாக கில்லி படத்தில் வரும் திரிஷாவாக சௌந்தர்யா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அது நன்றாக இருந்தது. அடுத்ததாக வாரணம் ஆயிரம் சூர்யாவாக அருண் ஒரு பாடலுக்கு ஆடினார். அது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது.
அடுத்து ஆயிரத்தில் ஒருவன் பார்த்திபன் கேரக்டரை ராவிந்தருக்கு கொடுத்தார்கள். அவரால் முடிந்த வரையில் ஏதோ நடனம் ஆடினார். எல்லோரும் அவருக்கு ஆதரவளித்து என்கரேஜ் செய்தார்கள். இன்னும் எத்தனை நாட்கள் இந்த ஆடிய ஆட்டம் என்ன டாஸ்க் நடைபெறும் என்று தெரியவில்லை. இதற்கு இடையில் உள்ளே இருக்கும் எட்டு போட்டியாளர்களுடன் வெளியே இருந்து வந்த முன்னாள் 8 போட்டியாளர்கள் இடம் மாற்றம் செய்வதற்கு உண்டான போட்டிகள் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்தது. அது எப்போது நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.