Bigg Boss Tamil Season 8 Day 92: பத்த வச்ச பிக் பாஸ்… கதறி அழுத சௌந்தர்யா…

Bigg Boss Tamil Season 8 Day 92 இல் ஆரம்பமே பிக் பாஸ் பத்த வைத்து விட்டார். ஹவுஸ்மேட்ஸ்க்கு ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது யார் வெளியில் PR செட் செய்து வைத்திருப்பார்கள்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 92 இல் ஆரம்பமே பிக் பாஸ் பத்த வைத்து விட்டார். ஹவுஸ்மேட்ஸ்க்கு ஒரு டாஸ்க் கொடுத்தார். அதாவது யார் வெளியில் PR செட் செய்து வைத்திருப்பார்கள் ன்று கேள்வி கேட்டு அனைவரும் பதில் கூற வேண்டும் என்று கூறினார். இதுவரை சீசனங்களில் பிக் பாஸ் என்ற PR பற்றி டாஸ்க் கொடுத்ததே இல்லை.

bigg boss 47

ஹவுஸ்மேட்ஸ்ஸில் பாதி பேருக்கு மேலாக அனைவரும் சௌந்தர்யாவை தான் கூறினார்கள். ஆனால் லிவிங் ஏரியாவில் சௌந்தர்யா தைரியமாக பதில் அளித்தார். அது என்னவென்றால் ரசிகர்கள் தான் நம்மளை ப்ரொமோட் செய்வார்கள். என்னதான் PR வைத்து வேலை செய்தாலும் மக்களுக்கு நம்மை பிடித்தால் தான் நம்மளுக்கு ஓட்டு போட்டு இங்கு இருக்க வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் யாரும் இருக்க முடியாது என்று கூறிவிட்டு சென்றார்.

ஆனால் அவரால் அனைவரும் PR செட் செய்தது சௌந்தர்யா தான் என்று கூறியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நாள் முழுவதும் அழுது கொண்டே இருந்தார். நான் அப்படி செய்யவே இல்லை என்று கூறினார். நான் இத்தனை வருஷம் கழிச்சு ரொம்ப கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு நான் வந்து இருக்கேன். ஏழு வருஷமா மீடியாவில் இருக்கேன் எனக்கு Reach கிடைக்கல. இப்போ எனக்கு உள்ள வந்து ஓரளவு மக்கள் என்ன பார்த்து ரசிக்கிறாங்க பிரமோட் பண்றாங்கன்னா என்கிட்ட ஏதோ ஒன்னு பிடிக்க போய் தானே செய்றாங்க.

என்னை பொறுத்த வரைக்கும் PR என்பது மக்கள்தான். அவங்களுக்கு பிடிக்கிறதுனால ப்ரொமோட் பண்றாங்க இதுல நான் என்ன பண்றது என்று கூறி விளக்கம் கூறிக் கொண்டிருந்தார். அடுத்ததாக கார்டன் ஏரியாவில் கிராசரி டாஸ்க் நடைபெற்றது. சுத்தி சுத்தி வந்தீக என்ற டாஸ்கை கொடுத்து பின்பு கிராசரி ஷாப்பிங் நடைபெற்றது. அடுத்ததாக இந்த வாரம் வெளியேறிய ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் வீட்டிற்குள் வருவார்கள். அவர்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும் வார இறுதியில் வெளியிலிருந்து வரும் இரண்டு போட்டியாளர்கள் உள்ளே இருக்கும் இரண்டு போட்டியாளர்களை Replace செய்வார் என்று புதுவித போட்டியை பிக் பாஸ் கூறியிருந்தார்.

bigg boss 48

அதை கேட்டதும் உள்ளே இருந்த ஹவுஸ்மேட்ஸ் கலக்கமடைந்து விட்டார்கள். எப்படியாவது அவங்களுடன் போராட வேண்டும் என்று பேசினார்கள். அடுத்ததாக இந்த வாரம் வெளியில் இருந்து ஹவுஸ்மேட்ஸ் வருகிறார்கள் அவர்களிடம் பிரச்சனை தூண்டும் விதமாக ஒரு போர்ட் டாஸ்க்கு பிக்பாஸ் கொடுத்தார். அதில் பல வாக்கியங்கள் இருந்தது. அந்த வாக்கியங்களை ஒவ்வொருவராக ஒவ்வொருவருக்கும் கொடுக்கக் கூறினார். இந்த டாஸ்க் நெடு நேரம் நடைபெற்றது. அந்த Board- கார்டன் ஏரியாவில் வைத்து விட்டார்கள். இதை பார்த்ததும் வெளியில் இருந்து வந்தவர்கள் கேள்வி கேட்பார்கள். இதனால் சலசலப்புகள் ஏற்படும். அதை மனதில் வைத்து தான் பிக் பாஸ் கொடுத்து இருக்கிறார். இனிவரும் வாரம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கப்போகிறது. ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் வெளியில் பார்த்ததையும் உள்ளே நடந்து கொள்வதையும் வந்து சுட்டிக்காட்டி கூறுவார்கள். பரபரப்புக்கு பஞ்சமில்லை என்பது தெரிகிறது.