Bigg Boss Tamil Season 8 Day 91 இல் விஜய் சேதுபதி எபிசோடு ஆரம்பித்தது. TTF தான் முதலில் அவர் வழங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அதை செய்யவில்லை. ஆரம்பத்தில் ஹாவுஸ்மேட்சுடன் பேசிக் கொண்டிருந்தார். அதில் இந்த வீட்டில் இவர் இருப்பதற்கு பதிலாக இவர் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று யாரை நினைக்கிறீர்கள் என்று ஒரு ஆக்டிவிட்டி கொடுத்தார் விஜய் சேதுபதி.
இதில் பலர் முத்துக்குமரன், விஷால் ஆகியோருக்கு பதிலாக ஆனந்தி, ரவிந்தர், ஜெஃப்ரி, சுனிதா, தர்ஷிகா என ஆளுக்கு ஒரு பெயரை கூறினார்கள். அதிகமாக இவர்கள் பெயர்தான் வந்தது. அதற்கு அடுத்ததாக TTF டிக்கெட்டை கொடுப்பதற்கு பிக் பாஸ் வீட்டுக்குள்ளே விஜய் சேதுபதி சென்றார். ஹவுஸ்மேட்ஸ் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு Confession ரூம் வழியாக விஜய் சேதுபதி உள்ளே வந்தார்.
வந்ததும் நெடு நேரம் ஹவுஸ்மேட்ஸிடம் பேசிக்கொண்டு இருந்தார். இந்த பிக் பாஸ் உடைய பயணம் எப்படி இருந்தது உங்களுக்கு எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தியது என்று விஜய் சேதுபதி கேட்டார். எல்லோரும் பதில் கூறிக் கொண்டிருந்தனர். அதேபோல் தனக்கு பிக் பாஸ் பயணம் எப்படி இருந்தது மனிதர்களைப் பற்றி என்னால் எவ்வாறு புரிந்து கொள்ள முடிந்தது என்பதையும் விஜய் சேதுபதி கூறினார்.
அடுத்ததாக கார்டன் ஏரியாவில் வைத்து ரயானுக்கு TTF டிக்கெட்டை விஜய் சேதுபதி கொடுத்தார். அப்போது ரயான் நான் 24-வது கண்டஸ்டன்ட்டாக கடைசில்தான் இந்த வீட்டிற்குள் வந்தேன். ஆனால் இப்போது நான் முதலாவதாக பைனல் வாரத்திற்கு செல்கிறேன் என்று கூறினார். அதைக் கேட்டு விஜய் சேதுபதி சந்தோஷம் அடைந்தார். அனைவருக்கும் வாழ்த்து கூறிவிட்டு வெளியே சென்றார்.
அடுத்ததாக எவிக்சன் ப்ராசஸ் நடைபெற்றது. யாரும் எதிர்பார்க்காமல் மஞ்சரி வெளியேறிவிட்டார். மஞ்சரி வெளியேறியது வீட்டில் இருந்த ஹவுஸ்மேட்ஸ்க்கு அதிருப்தியாக இருந்தது. ஏனென்றால் வீட்டிற்குள் எதுவுமே செய்யாமல் Safe Game விளையாடிய விஷால், எந்த டாஸ்கிலுமே ஆக்டிவாக செயல்படாத சௌந்தர்யா ஆகியோர் உள்ளே இருக்கும்போது மஞ்சரி நன்றாக விளையாடினார் அவரை எவிக்ட் செய்துவிட்டார்களே என்று அனைவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
ஜாக்குலின் கடந்த சில வாரமாக மஞ்சரியுடன் மிகவும் குளோசாக இருந்தார். அவர் மிகவும் உடைந்து அழுதுவிட்டார். மஞ்சரி ஸ்டேஜ்க்கு சென்றவுடன் எனக்கு இந்த பிக் பாஸ் பயணம் மிகவும் நிறைவாக இருக்கிறது. நான் நன்றாக விளையாடியிருக்கிறேன் என்று கூறி அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறிவிட்டு வெளியேறினார். அடுத்ததாக இந்த வாரம் எவிக்ட் ஆகி சென்ற அனைவரும் பிக் பாஸ் வீட்டினுள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.