Bigg Boss Tamil Season 8 Day 90 இல் விஜய் சேதுபதி எபிசோடு தொடங்கியது. தொடங்கியதும் கடந்த வாரம் விளையாட்டில் அனைவரும் ஆர்வமாக பங்கேற்றதை பாராட்டினார். அடுத்ததாக விளையாட்டில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டினார். முத்துக்குமரன் செய்த Strategy பற்றி பேசினார். குரூப் ஃபார்ம் பண்ணி விளையாடனும்னு எப்படி முடிவு பண்ணுங்க என்பதை கேட்டார்.
முத்து சில இடங்களில் தவறு செய்து விளையாடியதை சுட்டிக்காட்டினார். முத்துவுக்கு எப்போதும் தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டார் மேலே இருந்து பிக் பாஸ் சொன்னால் மட்டும்தான் ஒற்றுக்கொள்வாரா? எல்லா இடங்களிலும் தெளிவாக பேசக்கூடிய ஒருவர் ஸ்ட்ராட்டஜி குரூப் என எல்லாம் செய்யக்கூடிய முத்துவுக்கு தவறு என்றால் தெரியாதா என்று நேற்று முத்துக்குமரனை வச்சு செய்து விட்டார் விஜய் சேதுபதி.
அடுத்ததாக ஹவுஸ் மேட்ஸ் இடம் யாருக்கு TTF போகக்கூடாதுனு நினைசீங்க என்று ஒவ்வொருவரையும் கேட்டார். இதில் முத்துக்குமரன் மற்றும் ஒரு சில பேர் ரயானை கூறினார்கள். தீபக்கும் ரயானை கூறினார். அவர் லீடிங்கில் போவதால் அவரிடம் போட்டியாக விளையாட வேண்டும் என்று நினைத்தேன் என்று தீபக் கூறினார்.
ரயான் மஞ்சரி போகக்கூடாது நினைத்தேன் என்று சொன்னது அனைவருக்கும் ஷாக்காக இருந்தது. ஏனென்றால் மஞ்சரி தான் ரயானுக்கு இறுதி டாஸ்க் வழங்கினார். அதனால் அவருக்கு இரண்டு பாயிண்ட்கள் கிடைத்தது. தனக்காக டாஸ்க் கொடுத்த மஞ்சரியை ரயான் இப்படி சொல்லிட்டாரே என்று தோன்றியது.
அடுத்ததாக எலிமினேஷனில் ராணவ் வெளியேற்றம் செய்யப்பட்டார். ராணவ் மிகவும் சந்தோஷமாக சென்றார். ஆனால் கடைசி வரை குழப்பத்தை ஏற்படுத்தி விட்டு தான் சென்றார். விஜய் சேதுபதி உடன் ஸ்டேஜ்ஜில் பேசும்போது அனைவரும் ராணவ் எவிக்ட் ஆனது மகிழ்ச்சி தான் என்பது போல பேசினார்கள். குறிப்பாக சௌந்தர்யா அவன் தெரியணும்னு வந்தான் அவன் நல்லா தெரிஞ்சிட்டா நினைக்கிறேன்.
ஆனா அவனோட கேரக்டர் இன்னும் எங்களுக்கே கண்டுபிடிக்க முடியல அவன் போறது சந்தோஷம்தான் அவன் நினைச்சது நடக்கும் என்று கூறினார்கள். எல்லோருமே ராணவ் எங்களை irritate பண்ணிட்டார் டார்ச்சர் பண்ண தான் வந்தான் என்று செல்லமாக கூறினார்கள். ராணுவம் மிகவும் சந்தோஷத்துடன் ஜாலியாக பேசி விட்டு வெளியேறினார். டிக்கெட் டு பினாலே டிக்கெட்டை வென்றது ரயான் தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது. அடுத்த எபிசோடில் விஜய் சேதுபதி வீட்டில் வந்து அதை கொடுப்பார். நாளை யார் வெளியேறுவார் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.