Bigg Boss Tamil Season 8 Day 89 இல் டிக்கெட் டு பினாலே டாஸ்கின் இறுதி நாள் இறுதி டாஸ்க் நடைபெற்றது. டாஸ்க்கு முன்பாகவே பல பிரச்சினைகள் வீட்டுக்குள்ளே நடந்தது. ஜாக்குலினுக்கும் ரயானுக்கும் இடையே பிரச்சனைகள் நடந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு இடமாக ரயான் பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் ஜாக்குலின் ரயானை தம்பியாக தான் நினைத்துப் பார்க்கிறேன் என்று கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் பவித்ரா ஒரு பக்கம் புலம்பி கொண்டு இருக்கிறார். எனக்கு யாருமே டாஸ்க் தர மாட்டேங்கிறாங்க TTF க்காக மொட்ட அடிக்க சொன்னா கூட நான் அதுக்காக தயாராத்தான் இருக்கேன் ஆனா என்னை யாருமே கண்டுகொள்ள மாட்டேங்கிறாங்க என்று அழுதார். அதற்கு ஏற்றார் போலவே 0 புள்ளிகளில் இருக்கும் விஷால் அருண் பவித்ரா ஆகியோர் TTF இன் இறுதி டாஸ்கில் பங்கேற்க முடியாது என்று பிக்பாஸ் கூறிவிட்டார்.
TTF இறுதி டாஸ்க் கார்டன் ஏரியாவில் நடைபெற்றது. இதில் பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட் என்னவென்றால் TTFவின் ரிசல்ட் சனிக்கிழமை தெரிவிக்கப்படும் என்று கூறிவிட்டார். அதனால் சனிக்கிழமை விஜய் சேதுபதி எபிசோடில் விஜய் சேதுபதி யாருகிக்கு டிக்கெட் கிடைத்தது என்று அறிவித்து அவரே டிக்கெட்டை கொடுப்பார் என்பது போல் தெரிகிறது.
டாஸ்கெல்லாம் முடிந்தவுடன் அனைவரும் வீட்டில் இருந்து பேசி வருகின்றனர். அப்போது ராணுவால் பிரச்சினை ஏற்படுகிறது. சௌந்தர்யா ராணவை டாஸ்க் செய்ய சொல்கிறார். ஆனால் ராணவை டாஸ்க் செய்வதற்குள் சௌந்தர்யாவை டென்ஷனாகி கத்தி விட்டார். அந்த அளவுக்கு ராணுவ் பண்ணி விட்டார். இப்படி ஒவ்வொருவராக வரப்போகும் நிகழ்வைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தனர். அதோடு இந்த எபிசோடு முடிந்தது. இனி இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடு எப்படி இருக்கும் யாரை எஏவிக்ட்டாகி போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.