Bigg Boss Tamil Season 8 Day 88 இல் TTF டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்ததாக பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் ஆக்டிவிட்டி ஏரியாவில் நடந்தது. பத்து பின்சை வைத்து பாலால் அடித்து தள்ள வேண்டும். ஒவ்வொரு பின்சிலும் ஒவ்வொருத்தர் போட்டோ ஓட்டப்பட்டிருக்கும். ஒவ்வொருவர் வந்து பாலால் அதை அடித்து தள்ளும்போது யாருடைய போட்டோ விழாமல் இருக்கிறதோ அவர்களுக்கு பந்து போட்டவர் பாய்ண்ட் செல்லும்.
இந்த டாஸ்கினால் அனைவரின் பாயிண்டுகளும் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்று சொல்லலாம். மற்றவர்களுக்கு பாயிண்ட் தராமல் பின்சை கீழே தள்ளியது முத்துக்குமரன், மஞ்சரி, சௌந்தர்யா, ராணவ் ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள்.
அடுத்தது போன் பேசும் டாஸ்க்கில் மஞ்சரி ஃபோனை எடுத்தார். அதில் ராயனுக்கு டாஸ்க் கொடுக்கப் போவதாக கூறினார். ராயனுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் ஹேர் கலரிங் செய்ய வேண்டும் என்பது. அதன்படி முதலில் கோல்ட் கலர் போல் ஹேர் கலர் செய்திருந்தார்கள். அது பார்ப்பதற்கு சற்று நன்றாக இருந்தது. ஆனால் மறுபடியும் ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு ரயானை கூப்பிட்டு நியான் கிரீன் கலரை பண்ணி விட்டார்கள்.
இது ரயானுக்கு கொஞ்சம் விருப்பம் இல்லாதது போல் தான் இருந்தது. பச்சையாக அவரது முடி ஆகிவிட்டது. அடுத்ததாக பிக் பாஸ் டிரம் டாஸ்க் கொடுத்தார். ஒவ்வொருவரும் டிரமுக்குள்ளே போய் சென்று நிற்க வேண்டும். ஒவ்வொரு டிரம்மிலும் அவரவர் புகைப்படம் ஒட்டப்பட்டு இருக்கும். யார் மற்றவர்கள் ஜெயிக்க கூடாது என்று நினைக்கிறார்களோ அவர்களின் புகைப்படத்தை எடுத்து விட வேண்டும் என்பதுதான் டாஸ்க்.
இந்த டாஸ்க் ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்தது. அதற்குப் பிறகு கூட்டணி அமைத்து விளையாடலாம் என்ற முத்துக்குமார் பேசிக்கொண்டிருந்தார். அடுத்தக் கட்டமாக விளையாட்டு தொடங்கியதுமே அருணும் விஷாலும் கீழே விழுந்து விட்டார்கள். இதில் விஷாலுக்கு நன்றாக அடிபட்டுவிட்டது. அவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்ற எல்லா செக்கப்பும் பண்ணிவிட்டு ஒன்றும் இல்லை என்று அனுப்பி விட்டார்கள்.
அதேபோல் அருணுக்கும் அடிபட்டுவிட்டது. அவரையும் செக்கப் கூட்டி சென்றார்கள். அதனால் தற்காலிகமாக அந்த போட்டி நிறுத்தப்பட்டது. அடுத்ததாக இறுதி கட்டட டாஸ்க் நடைபெறும். இந்த TTF டாஸ்க்கில் ராயன்தான் தற்போது வரை பாய்ண்ட்களில் முன்னணியில் இருக்கிறார். அதனால் அவர் வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.