Bigg Boss Tamil Season 8 Day 86 இல் Ticket To Finale டாஸ்கின் 2வது கட்டம் தொடங்கியது. இரண்டாவது கட்டப் போட்டியில் அனைவரின் போட்டோவும் ஒரு கொடியில் தொங்க விட்டிருந்தார்கள். ஓட்டப்போட்டி போல் யார் முதலில் வந்து அதை எடுத்து மணியடிக்கிறார்களோ அவர்கள் எடுக்கப்பட்டிருக்கும் போட்டோவை எரித்து அவர்களை போட்டியிலிருந்து வெளியேற்றலாம்.
இதன் முதல் சுற்றில் ரயான் டாஸ்க் பீஸ்ட் போல அபாரமாக விளையாடினார். அவரின் ஓட்ட ஸ்பீடுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை. அனைவரையும் ஒவ்வொருவராக எலிமினேட் செய்து இறுதியில் அவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றார். அடுத்ததாக இந்த போட்டியின் இரண்டாவது கட்டம் நடைபெற்றது. இதில் முத்து சீக்ரெட் ஆக ஒரு திட்டம் செய்திருக்கிறார்.
அதாவது யாரு ஸ்கோர் போர்டில் இல்லையோ அவர்களுக்கு பாயிண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக கூட்டணி வைத்தார் போல் தெரிந்தது. முத்து, விஷால், அருண், ராயன், தீபக் என ஐந்து பேரும் இணைந்து விளையாடலாம் என்பது போல் பேசியிருந்தார்கள் என்றுதான் முத்து கூறினார். ஆனால் அவர் போட்ட பிளான் எதுவுமே நடக்கவில்லை. போட்டி ஆரம்பித்ததும் தனியாக விளையாட ஆரம்பித்தனர்.
அதைப் பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பவித்ராவும் சௌந்தர்யாவும் முத்து இப்படி பிளான் பண்ணி பலமா இருக்கிறவர்களை ஒன்னா சேர்த்தா நம்ம கேர்ள்ஸ் எப்படித்தான் நம்ம விளையாடுறது அவர் போட்ட பிளான் அவருக்கே கை கொடுக்கல நடக்கல கடைசில அதான் நடந்திருக்கு என்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்ததாக தனி டாஸ்க் நடைபெற்றது.
இதில் கார்டன் ஏரியாவில் தலைக்கு மேலாக பல்பு தொங்க விட்டிருக்கும். அதை ஒரு கையில் உயர்த்தி பிடிக்க வேண்டும். யார் கை நகர்கிறதோ லைட் அணைகிறதோ அவர்கள் இந்த போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். அப்படி இந்த போட்டியின் இறுதிவரை விளையாடியது தீபக், விஷால் முதல் இரண்டு இடத்தை பிடித்தார்கள். இப்படி ஒவ்வொரு போட்டியாக ஒவ்வொருவரும் மாறி மாறி ஸ்கோர் எடுத்து கொண்டு இருக்கிறார்கள். பார்ப்பதற்கு விறுவிறுப்பாக தான் இருக்கிறது. யார் இறுதியில் TTF டிக்கெட்டை பெறுவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.