Bigg Boss Tamil Season 8 Day 85 ஆர்வத்துடன் தொடங்கியது. இந்த வாரம் Ticket To Finale டாஸ்க் இருக்கிறது. யாருக்கு அந்த டிக்கெட் கிடைக்கும் என்பது காண்பதற்கு ஆவலாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்சும் வெறித்தனமாக விளையாடுவதற்கு காத்திருக்கிறார்கள். அனைவரிடமும் ஒரு தெளிவான விளையாட்டைப் பற்றிய சிந்தனை இருப்பது தெரிந்தது.
முதலாவதாக நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. இந்த முறை ஓப்பன் நாமினேஷன் ஆக பிக் பாஸ் வைத்திருந்தார். இதில் சௌந்தர்யா முத்துக்குமரனை தவிர மீதி அனைவரும் நாமினேஷனில் இருக்கிறார்கள். இந்த ஓபன் நாமினேஷனல் பலருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. ஒருவருக்கு பின்பு ஒருவராக பேசிக் கொண்டிருந்தார்கள்.
முக்கியமாக சௌந்தர்யா ஜாக்குலினை பற்றி பேசியது கவனத்தை ஈர்த்தது. சௌந்தர்யா நான் ஜாக்லின் ஓட friend தான். ஆனா அத காரணமாக வைத்து அவர் விளையாடும் முறையை கூறாமலோ அல்லது நாமினேஷன் செய்யாமலோ என்னால் இருக்க முடியாது. நான் இங்கு விளையாடுவதற்கு தான் வந்திருக்கிறேன். அவளுடைய பிரண்ட்ஷிப் என்னுடைய விளையாட்டை கெடுக்கக்கூடாது. ஆனா அதை நான் செய்யும்போது அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே ரியாக்ஷன் கொடுக்கிறார்.
என்னுடைய கேமை விளையாட வந்திருக்கேன் அதுதான் எனக்கு ஃபர்ஸ்ட் முக்கியமானது அதற்கு அடுத்தது தான் பிரண்ட்ஷிப் எல்லாமே என்று தெளிவாக பேசிகொண்டிருந்தார் சௌந்தர்யா. அடுத்ததாக நாமினேஷன் பிரீ டாஸ்க்கின் முதல் டாஸ்க் நடைபெற்றது. இந்த முதல் டாஸ்க்கின் முடிவில் ராணவும் அருணும் ஆளுக்கு இரண்டு இரண்டு பாயிண்ட்ஸ் எடுத்தார்கள். வழக்கம்போல் எல்லாம் சீசன்களிலும் இருக்கும் அதே டாஸ்க் போல் நடைபெறுமா இல்லை வித்தியாசமாக டாஸ்க்களை பிக் பாஸ் TTFவிற்கு கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆக மொத்தம் இந்த வாரம் விறுவிறுப்பாக செல்லும் என்பதில் ஐயமில்லை.