Bigg Boss Tamil Season 8 Day 84 இல் விஜய் சேதுபதி எபிசோடு ஆரம்பித்த உடனே விஜய் சேதுபதி முதலாவதாக வில்லங்கமான ஒரு கேள்வியை கேட்டார். அதாவது இந்த வீட்டில் மக்களிடம் எனக்கு ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை இவர்களுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று யாரை சொல்வீர்கள் என்று ஒவ்வொருவராக கூறும்படி கேட்டார். அதில் சௌந்தர்யா விஷால் ஜாக்குலின் ராணவ் ஆகியோரை அதிகமானவர்கள் கூறினார்கள்.
அடுத்ததாக ஒவ்வொருவரையும் நீங்கள் மற்றவர்களுக்கு புத்தாண்டு ரெசல்யூசனாக இதை எடுத்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று கூறுங்கள் என்று கூறினார் விஜய் சேதுபதி. பின்னர் வழக்கம் போல ராணவை வச்சு செய்தார் விஜய் சேதுபதி. ராணவ் பதில் சொல்ல முடியாமல் திக்கு முக்காடி விட்டார். அடுத்ததாக எவிக்ஷன் ப்ராசஸ் நடைபெற்றது. அனைவரும் மிகுந்த நம்பிக்கை உடன் ராணவ் தான் இந்த வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறினார்கள்.
ஏற்கனவே அவருக்கு கையில் அடிபட்டுவிட்டது. இனி டாஸ்க்கள் பலமாக இருக்கும் என்பதால் அவர் போகலாம் என்று நினைத்தார்கள். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அன்சிதா எவிக்ட் ஆகிவிட்டார். அவர் செல்லும் போது மிகவும் க்யூட்டாக அனைவரிடமும் நன்றாக பேசிவிட்டு சென்றார். அது பார்ப்பவர்களுக்கு மிகவும் எமோஷனலாக இருந்தது.
உண்மையிலேயே ஒரு டஃப்பான கண்டஸ்டண்ட் என்றால் அது அன்சிதா தான். எல்லா டாஸ்க்களிலும் இறங்கி விளையாடி தங்களுடைய பங்களிப்பை ஆணித்தரமாக இந்த பிக் பாஸ் சீசன் எட்டில் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார். வெளியே விஜய் சேதுபதியிடம் சென்ற பிறகும் ஸ்கிரீனில் அனைவரிடமும் அவர் கொடுத்த அறிவுரையும் பேசிய விதமும் பார்ப்பதற்கு எமோஷனலாக இருந்தது.
நான் எதை நினைத்து வீட்டிற்குள் வந்தேனோ என்னுடைய பெயர் கெட்ட பெயர் ஆனது அது சரியாகிவிடும் என்று நினைத்து வந்தேன் அது நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன் என்று கூறினார். அவருக்கு வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு விஜய் சேதுபதி Ticket to Finale டிக்கெட்டையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அடுத்த வாரம் TTF டாஸ்க் நடைபெற இருக்கிறது. ஃபிரண்டு, அவங்க பாவம், இவங்க பாவம்னு விட்டுக் கொடுக்காம உங்களுக்காக நீங்க விளையாடுங்க. போட்டியின் இறுதி கட்டத்திற்கு நாம வந்தாச்சு நீங்க தான் இந்த பிக் பாஸோட டாப் 10 கண்டெஸ்ட்டன்ட்ஸ் என்று கூறி அடுத்த வாரம் சந்திக்கலாம் என்று கூறி கிளம்பி விட்டார் விஜய் சேதுபதி. இந்த வாரம் போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று தோன்றுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.