Bigg Boss Tamil Season 8 Day 83 இல் விஜய் சேதுபதி எபிசோடு ஆரம்பித்தது. விஜய் சேதுபதி ஆரம்பம் முதலே மிகவும் சந்தோஷமாக பேசினார். ஒவ்வொரு குடும்பத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் நிறைவாக இருந்தது என்று கூறினார். அதற்கு அடுத்ததாக ஒவ்வொருவரையும் எழுப்பி அவர்கள் வீட்டில் இருந்து வந்த்து எப்படி இருந்தது என்ற அனுபவத்தை பகிர சொன்னார்.
ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தை கூறும் போது விஜய் சேதுபதி அவர் Feel செய்வதையும் கூறினார். இதிலிருந்து அவர் எபிசோடு பார்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. குறிப்பாக முத்துக்குமரனின் அம்மா வந்து பேசியதை மிகவும் பாராட்டினார் விஜய் சேதுபதி. ஒரு கட்டத்திற்கு பிறகு அம்மா பிள்ளையாகி விடுவாங்க உங்க அம்மா வந்தது உங்களுடைய குழந்தை மாதிரி தான் எனக்கு தெரிஞ்சது என்று கூறினார். அவர் கூறியது கேட்பதற்கே நெகிழ்ச்சியாக இருந்தது.
அடுத்ததாக ஜெஃப்ரிக்கு அறிவுரை கூறினார். அப்படி எல்லார் வீட்டிலிருந்து வந்தவர்களையும் நண்பர்கள் வந்ததையும் பாராட்டினார் விஜய் சேதுபதி. அதற்கு அடுத்ததாக வீட்டில் இருந்தே வந்தவர்களில் முரண்பாடுகள் இருக்கிறது என்று யாரை சொல்லுவாங்கனு நீங்க எதிர்பார்த்திங்க என்று ஒவ்வொருவரையும் கேட்டார். அடுத்ததாக சௌந்தர்யாவின் சமையலை கலாய்த்து சமையல் குறிப்பு புத்தகத்தையும் பிக் பாஸ் ஷோ ரூம் வழியாக அனுப்பி வைத்திருந்தார்.
அது எல்லோரையும் சிரிக்க வைத்துவிட்டது. விஜய் சேதுபதி நீங்க கண்டிப்பா சமையல் குறிப்பு உக்காந்து எழுதுங்க என்று கூறினார். நான் துபாய்ல சமையல் தெரியாம கஷ்டப்பட்டபோது ஒரு தடவை ஒரு குழம்பு வைக்கிறேன்னு காரம் அதிகமாயிருச்சு. அந்த காரத்தை பேலன்ஸ் பண்ண சர்க்கரை தயிர்னு போட்டுட்டு இருந்தேன். அதே மாதிரி நீங்க புளிக்குழம்புல பட்டர் போட்டது எனக்கு ஞாபகம் வந்துருச்சு என்று கூறினார்.
அடுத்ததாக யாரும் எதிர்பாரா விதமாக எவிக்ஷன் ப்ரோசஸ் நடைபெற்றது. அதிலும் ஜெஃப்ரி வெளியேறியது ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஜெப்ரி மிகவும் நிறைந்த மனதோடு வீட்டை விட்டு வெளியேறினார். ஜெஃப்ரி எவிக்சன் ஆனது விஜய் சேதுபதியே மிகவும் கலங்க வைத்துவிட்டது. அவரே மிகவும் பீல் செய்துவிட்டார். இல்லத்தில் இருக்கும் செல்லங்களில் எனக்கு மிகவும் பிடித்த செல்லம் இவன்தான் என்று கூறினார். ஜெபிரியை கிட்டத்தட்ட நான்கு ஐந்து முறை ஸ்டேஜிலேயே கட்டி அணைத்து முத்தமிட்டு விட்டார் விஜய் சேதுபதி.
அவருக்கு ஜெப்ரியை மிகவும் பிடித்திருந்தது. அவருடைய எலிமினேஷன் ஆனது அவரே கலங்க வைத்தது என்று சொல்லலாம். அது பார்க்கவும் நமக்கே தெரிந்தது. உங்க அம்மா உன்னை நல்லா வளர்த்து இருக்காங்க உங்க அம்மா மெச்சூரரா பேசுறாங்க அம்மா பேச்சை கேளு இன்னும் அடுத்தடுத்து நிறைய இடத்துக்கு போவேன் நான் விரைவில் உன்னை சந்திப்பேன் என்று கூறி வழி அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. ஜெப்ரிக்கு நல்லதொரு வாய்ப்பை விஜய் சேதுபதி வழங்குவார் போல் தெரிகிறது. இனி அடுத்த எபிசோடில் மறுபடியும் யார் வெளியேறுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.