Bigg Boss Tamil Season 8 Day 82 இல் இப்படி ஒரு எபிசோடு நடைபெறும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். கடந்த மூன்று நாட்களில் அனைவரின் வீட்டில் இருந்து பெற்றோர்கள் வந்து எல்லோரையும் பார்த்தார்கள். நல்லபடியாக பேசி சென்றார்கள். ஆனால் இன்றைய எபிசோடில் போட்டியாளர்களின் நண்பர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்தார்கள்.
விஷால் மற்றும் பவித்ராவின் தோழிகளான ஆன நேஹா மற்றும் சமந்தா, பின்னர் தீபக்கின் நண்பர் சௌந்தர்யாவின் நண்பரான விஷ்ணு வந்திருந்தனர். விஷ்ணு கடந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர். அனைவரும் வந்து தங்களது கருத்துக்களை கூறி ஜாலியாக பேசிக் கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாரா விதமாக சௌந்தர்யா நான் விஷ்ணுவிடம் பிரபோஸ் செய்யப் போகிறேன் என்று பயங்கர செட்டப் எல்லாம் செய்து ப்ரபோஸ் செய்தார்.
இதை விஷ்ணுவே எதிர்பார்க்கவில்லை மிகவும் அதிர்ச்சி ஆகிவிட்டார். இந்த எபிசோடு TRP இல் டாப்பில் சென்றுவிட்டது என்று சொல்லலாம். ஆனால் இதுபோன்று எந்த சீசனிலும் நடைபெறவில்லை. பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. சௌந்தர்யா எப்பவுமே ஜாலியாக லைட்டா எடுத்துக்கொள்ளக் கூடிய ஒரு பெண் அவர் இப்படி எல்லாம் செய்தாரா என்று நம்ப கூட முடியவில்லை.
அடுத்ததாக அருணின் காதலி அர்ச்சனா உள்ளே வந்தார். இவர் கடந்த சீசனின் போட்டியாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அவருடன் ஈரோடு மகேஷும் உள்ளே வந்தார். இந்த எபிசோடு என்னவோ பிக் பாஸ் காதல் ஜோடிகளின் களம் போன்றே தெரிந்தது. மிகவும் பாசிட்டிவாக ஜாலியாக சென்ன்றது என்றே சொல்லலாம். நண்பர்களின் வரவு பிக் பாஸ் வீட்டில் இருந்த அனைவரையும் ஆச்சர்யமடைய செய்தது. எல்லோரும் ரெஃப்ரெஷ் ஆன மாதிரி உணர்ந்தார்கள்.
பவித்ராவின் தோழியான சமந்தா மட்டும் மஞ்சரியை வச்சு செய்து விட்டார். பவித்ரா பற்றி அவரது தோழி பேசியது அவருக்கு சற்று வருத்தமாக இருந்தது. அடுத்ததாக இனி விஜய் சேதுபதி எபிசோடு நடக்க இருக்கிறது. இந்த வாரம் டபுள் எவிக்சன் என்றும் கூறுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.