Bigg Boss Tamil Season 8 Day 80 இல் ஃபேமிலி டாஸ்கின் இரண்டாவது நாளில் முதலாவதாக சௌந்தர்யாவின் குடும்பம் வந்தார்கள். சௌந்தர்யா அம்மா அப்பா தம்பி ஆகியோர் வந்தார்கள். இவர்கள் குடும்பம் வந்ததே மிகவும் பாசிட்டிவாக இருந்தது. இவர்கள் யாரைப் பற்றி குறை கூறவில்லை. சௌந்தர்யாவை தான் நீ இப்படி செஞ்சிருக்கக் கூடாது அப்படி பண்ணிருக்கக் கூடாது என்று அவருக்கு தான் அறிவுரை வழங்கினார்கள்.
மிகவும் பாசிட்டிவாக அனைவரிடமே பேசினார்கள். வந்த பெற்றோர்களிலேயே தனது வீட்டுப் பிள்ளையை குறை சொன்னவர்கள் இவர்கள்தான். சௌந்தர்யாவிடம் தான் முரண்பாடு இருக்கிறது அவள்தான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவர் அப்பா கூறியது அனைவரையும் ஆச்சரியமடையவும் சந்தோஷம் அடையவும் வைத்தது.
அடுத்ததாக ராணவின் அப்பா அம்மா தம்பி தங்கை அனைவரும் வந்திருந்தார்கள். ராணவின் அப்பா கராத்தே மாஸ்டர் என்பதால் வீட்டில் இருந்த பெண்களுக்கு கராத்தே சொல்லிக் கொடுத்தார். இது பார்ப்பதற்கு மிகவும் ஜாலியாக இருந்தது. ராணவின் தங்கை சௌந்தர்யாவிடம் என் அண்ணா வலியில் இருக்கும்போது நீங்க நடிக்கிறான்னு சொன்னது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. நாங்க வீட்ல எல்லாருமே அத பாத்து அழுதுட்டோம் என்று சொன்னார்.
அடுத்ததாக பவித்ராவின் குடும்பத்தார் வந்தார்கள். பவித்ரா மிகவும் எமோஷன் ஆகி அழுதுவிட்டார். அவர்கள் அம்மா மற்றும் பாட்டி மைக்கில் பேசினார்கள். அதை அவர் கேட்டு மிகவும் கதறி அழுதார். அடுத்ததாக அன்சிதாவின் அம்மா அண்ணன் வந்தார்கள். இவர்கள் வந்தது மிகவும் ஜாலியாக சென்றது. ஏனென்றால் அன்சிகாவின் அண்ணன் வீட்டில் அனைவரையும் கலாய்த்து தள்ளிவிட்டார்.
அனைவருக்கும் அன்ஷிதாவின் அம்மா சாப்பாடு ஊட்டி விட்டது பேசியது எல்லாமே நன்றாக இருந்தது. மீதி இருப்பவர்கள் முத்துக்குமரன் ஜாக்குலின் அருண் மற்றும் ஜெப்ரி தான். அவர்களின் பெற்றோர்கள் நாளைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.