Bigg Boss Tamil Season 8 Day 79 இல் Freeze டாஸ்க் ஆரம்பித்தது. இதனால் அனைவரும் சந்தோஷமாக இருந்தனர். முதலாவதாக தீபக் குடும்பம் உள்ளே வந்தார்கள். தீபாக்கின் மனைவி சிவரஞ்சனி மற்றும் மகன் ஆகியோர் வந்தார்கள். அவர்கள் வந்ததுமே ஒரு பாசிட்டிவ் வைப்பாக இருந்தது. குடும்ப சுற்று ஆரம்பமே நன்றாக இருந்தது.
இருவரும் நன்றாக பேசி டான்ஸ் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர். இதுவரை இல்லாமல் பிக் பாஸ் இந்த முறை வீட்டில் இருந்து உள்ளே வருபவர்கள் போட்டியாளர்களிடம் இருக்கும் முரண்பாடுகளை கூற சொன்னார். அப்படி தீபக்கின் மனைவி அருணிடம் நீங்க தீபக்கை Character Assasination பண்ணினது வருத்தமாக இருந்துச்சு என்று கூறினார்.
அதற்கு அடுத்ததாக மஞ்சரியின் மகன் அம்மா அக்கா எல்லாரும் வந்திருந்தார்கள். மஞ்சரி மகன் செய்த செயல்கள் cute ஆக இருந்தது. இவர்கள் வந்து முரண்பாடாக இருப்பது சொன்னது சௌந்தர்யா அன்ஷிதா ஆகியோரை கூறினார்கள். என் மகளை ஏன் உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கேட்டார்கள். அடுத்ததாக விஷாலின் அம்மா அப்பா அனைவரும் வந்திருந்தார்கள். விஷாலின் அப்பா நல்ல முறையாக எல்லோரிடமும் பேசினார்.
முரண்பாடு இருப்பதாக விஷாலின் அப்பாவும் அருணை தான் கூறினார். வந்தவர்கள் எல்லோரும் அருணை வைத்து செய்தது போல் இருந்தது. இறுதியாக ராயனின் அம்மா அக்கா வந்திருந்தார்கள். ராயனின் அக்கா தான் ராயனையே திட்டிவிட்டார். நீ யாரை நம்புகிராயோ அவங்க யாருமே உண்மை கிடையாது என்று கூறினார். பின்னர் ராயினின் அக்கா தான் மூஞ்சியில் அடித்தார் போல் ஹவுஸ்மேட்ஸிடம் நிறைய விஷயங்களை கூறினார்.
குறிப்பாக மஞ்சரி மற்றும் முத்துகுமரனிடம் என் தம்பி நாமினேஷன் ப்ரீ பாஸ் வாங்குவது உங்களுக்கே அவ்ளோ பிடிக்கல எல்லா இடத்துலயும் அதைப்பத்தி பேசினீங்களே என்று கூறினார். இவர் பேசியது சற்று வருத்தமாக இருந்தது. இருந்தாலும் இந்த மாதிரியான டாஸ்க் பிக் பாஸ் கொடுத்திருக்க வேண்டாம் என்று தான் தோன்றியது.