Bigg Boss Tamil Season 8 Day 76: குரூப்பாக விளையாடிய அனைவரையும் வச்சு செய்த விஜய் சேதுபதி…

Bigg Boss Tamil Season 8 Day 76 இல் விஜய் சேதுபதி எபிசோடு ஆரம்பித்தது. எபிசோடு ஆரம்பித்த முதல் ராணவை பற்றிய விசாரணையை எடுத்தார் விஜய் சேதுபதி. ராணவின் உடல் நலம் எப்படி…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 76 இல் விஜய் சேதுபதி எபிசோடு ஆரம்பித்தது. எபிசோடு ஆரம்பித்த முதல் ராணவை பற்றிய விசாரணையை எடுத்தார் விஜய் சேதுபதி. ராணவின் உடல் நலம் எப்படி இருக்கிறது என்று கேட்டார். அடுத்ததாக ராணவ் செய்தது நடித்தது என்று கூறியவர்கள் யார் என அனைவரையும் எழும்ப சொன்னார்.

bigg boss 79

அதில் சௌந்தர்யா விஷால் முத்து ன்சிதா ஜெப்ரி எல்லோரும் எழும்பி நின்றனர். விஜய் சேதுபதி எல்லோரையும் நன்றாக திட்டிவிட்டார். எப்படி ஒருத்தர் வலியில இருக்கும்போது அதை சந்தேக பார்வையோடு இப்படி பாப்பீங்க இதே ராணவின் இடத்தில் வேறு யாரவது இருந்தால் இப்படி பணவீங்களாதே ராணவ் பண்ணி ஜெப்ரிக்கு அடிபட்டு இருந்தது சொன்னா அங்க நடக்கிறது வேற அப்படித்தானே என்று கூறினார்.

அடுத்ததாக ராணவிடம் கூட இந்த மாதிரி அவங்க நடந்துகிட்டாங்கன்னா அது உன்னோட செய்கை தான் காரணம். இதுல இருந்து நீ புரிஞ்சுக்கோ என்று கூறினார். அடுத்ததாக யாரும் எதிர்பாராத விதமாக அன்சிதாவை தான் வச்சு செய்து விட்டார் விஜய் சேதுபதி. அது எப்படி நீங்க பவுல் கேம் நிறைய பண்ணீங்க அதுக்கு மேல கேம் Dirty ஆக போக ஆரம்பித்தது என்று கேட்கும் போது ஜாக்குலின் மஞ்சரி பாயிண்ட் எடுத்துச் கூறினார்.

பிறகு விஜய் சேதுபதி அன்ஷிதா நீங்க வந்து அவங்க மேல குற்றச்சாட்டு வைக்கிறீங்க ஆனா அதையே நீங்களும் பண்ணி இருக்கீங்க அப்ப அவங்க பண்ணா தப்பு நீங்க பண்ணா மட்டும் அதை சரி அதை பத்தி எதுவுமே பேச மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டார். அன்சிதா எவ்வளவோ சமாளிப்பதற்கு தான் பார்த்தார். அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை.

bigg boss 80

அடுத்ததாக விஷாலையும் ஜெப்ரியையும் நல்ல கேள்வி கேட்டார் என்று சொல்லலாம். நான் போன வாரமே உங்களுக்கு எப்படி இருக்கணும்னு சொன்னேன் ஆனா நீங்க மாறவே இல்லை என்று கூறினார் விஜய் சேதுபதி. குறிப்பாக ஜெப்ரியிடம் நான் உன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன் ஆனா நீ வந்து மாறல உனக்கு தான் எல்லாருமே எங்க சப்போர்ட் பண்றாங்க அதை சந்தோஷமா ஏத்துக்கிற என்று கூறினார். இந்த எபிசோடு விறுவிறுப்பாக சென்றது. அடுத்த எபிசோடில் கேப்பிட்டன்சி பற்றி பேசுவார் மற்றும் முத்துக்குமார் பற்றியும் பேசுவார் போல் தெரிகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.