Bigg Boss Tamil Season 8 Day 74: செங்கல் டாஸ்கில் அபாரமாக விளையாடிய பெண்கள்… நாமினேஷன் பிரீ பாஸை பெற்ற ராயன்…

Bigg Boss Tamil Season 8 Day 74 இல் செங்கல் டாஸ்க் ஒரு வழியாக முடிந்துவிட்டது. மிகவும் போராடி விளையாடி இந்த போட்டியை முடித்து இருக்கிறார்கள். முத்துக்குமார் தீபக் மஞ்சரி பவித்ரா அன்சிதா…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 74 இல் செங்கல் டாஸ்க் ஒரு வழியாக முடிந்துவிட்டது. மிகவும் போராடி விளையாடி இந்த போட்டியை முடித்து இருக்கிறார்கள். முத்துக்குமார் தீபக் மஞ்சரி பவித்ரா அன்சிதா ஜாக்குலின் ராயன் ஆகியோர் மிகவும் போட்டியில் தீவிரமாக சென்று சண்டை போட்டு விளையாடினார்கள் என்று சொல்ல வேண்டும்.

bigg boss 72

பெண்கள் ஜாக்குலின் பவித்ரா அன்சித்தா மஞ்சரி ஆகியோர் இந்த டாஸ்கில் தூள் கிளப்பி விட்டார்கள். இந்த டாஸ்க்கின் இரண்டாம் பாகத்தில் கன்வேயர் பெல்ட்டில் முயல் விட்டு விட்டு யாரும் அதிக முயல் வைத்திருக்கிறாரோ அவர்கள் தான் வெற்றியாளர் என்று பிக் பாஸ் அறிவித்த நிலையில் மஞ்சள் டீம் ஜாக்குலின் ரஞ்சித் ராயன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதனால் அவர்கள் மூன்று பேருக்குள் பேசி யாருக்கு நாமினேஷன் ப்ரீ பாசை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள் என்று பிக் பாஸ் கூறினார். லிவிங் ஏரியாவில் வைத்து டிஸ்கஷன் சென்றது. ஏற்கனவே ராயனுக்கு தான் அது செல்ல வேண்டும் என்று ஜாக்களின் முடிவு எடுத்தது போல் பேசிக் கொண்டிருந்தார். ரஞ்சித் தனக்காக வாதாடினார் கோபப்பட்டார்.

bigg boss 73

ரஞ்சித்தை ஜாக்குலின் மிகவும் ஓவராக தாக்கி பேசினார் கடைசியில் ரஞ்சித் விட்டுக் கொடுத்து விட்டார். அதனால் நாமினேஷன் ப்ரீ பாஸ் ராயனுக்கு கிடைத்துவிட்டது. இருந்தாலும் இது முடிந்த பிறகு முத்துக்குமார் ஜாக்கிடம் வந்து ராயன் பல இடத்தில் நாம் கூட்டணி அமைக்கலாம் என்று பேசிய பிறகும் அவள் சரியாக அதை பின்பற்றவில்லை அவர் தவறு செய்தாலும் நீதான் அவருக்கு சப்போர்ட் பண்ற என்று கூறினார். அதிகநேரம் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். இந்த வாரமே பிக் பாஸ் வீடு ரணகளம் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு செங்கல் டாஸ்க் பரபரப்பாக சென்று முடிந்தது. இனி இந்த வாரத்தின் ஃபெஸ்ட் பெர்ஃபார்மர் யார் ஒர்ஸ்ட் performer யார் என்பதை பற்றி அடுத்த எபிசோடில் காணலாம்.