Bigg Boss Tamil Season 8 Day 73: போர்க்களமான பிக் பாஸ் வீடு… கதறி அழுத விஷால்…

Bigg Boss Tamil Season 8 Day 73 இல் செங்கல் டாஸ்கில் இன்றைய தினம் மிக பரபரப்பாக சென்று கொண்டு இருந்தது. பிக் பாஸ் வீடே போர்க்களமாக மாறிவிட்டது என்று சொல்லலாம். அனைவரும்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 73 ல் செங்கல் டாஸ்கில் இன்றைய தினம் மிக பரபரப்பாக சென்று கொண்டு இருந்தது. பிக் பாஸ் வீடே போர்க்களமாக மாறிவிட்டது என்று சொல்லலாம். அனைவரும் அடித்து பிடித்து விளையாடினார்கள். முத்துக்குமரன் ஜெப்ரி தீபக் மஞ்சரி பவித்ரா அன்சிதா ஆகியோர் வெறித்தனமாக இந்த விளையாட்டை விளையாடினார்கள் பார்ப்பதற்கு எவ்வளவு கொஞ்சம் பயமாக தான் இருந்தது.

bigg boss 69

ஜாக்குலின் ரஞ்சித் ராயன் ஓரளவு போட்டி போட்டார்கள். இந்த முதல் கட்ட போட்டியில் இருந்து ரெட் டீம் அருண் விஷால் சௌந்தர்யா மூன்று பேரும் எலிமினேட் ஆகி விட்டார்கள். இந்த டாஸ்கில் அவர்கள் விளையாடும் விதத்தை பாக்கும்போது சற்று ஆபத்தாக இருக்குமோ என்று தோன்றியது. அருணுக்கு கூட காலையில் அடிபட்டது. முத்துவுக்கும் பயங்கரமாக அடிபட்டது.

இதற்கிடையில் சண்டை வேறு வந்தது. விஷால் அவ்வப்போது ஹோல்டு பண்ணி பார்த்து விளையாடனும் என்று கத்திக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் விஷால் கண்ட்ரோல் பண்ண முடியாமல் அழ ஆரம்பித்து விட்டார். சௌந்தர்யா ஏனென்று கேட்டதற்கு அவங்க எப்படி விளையாடுறாங்க பாரு பாக்குறதுக்கு எனக்கு பயமா இருக்கு ஏதாவது ஒன்னு ஆச்சின்னா என்ன பண்றது ஏன் இப்படி விளையாடுறாங்க என்று சொல்லி அழுதார்.

bigg boss 70

அடுத்து பவித்ரா ஜாக்குலின் இடையே பிரச்சனை வந்தது. ஆனால் மஞ்சரி என்னதான் அன்சிகா போட்டு அமுக்கினாலும் ஒன்றும் சொல்லவில்லை. ப்ளூ டீமில் இருந்த முத்துக்குமரன் மஞ்சரி தீபக் பாரமாக விளையாடினார்கள் டப் கொடுத்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர்கள் அடிபட்டாலும் கூட வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை Game Spirit கொண்டு விளையாடினார்கள். இந்த டாஸ்கில் யார் ஜெயிப்பார்கள் யாருக்கு நாமினேஷன் பிரீ பாஸ் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பாப்போம்.