Bigg Boss Tamil Season 8 Day 72: அடிபட்ட ராணவ்… ரணகளமான பிக் பாஸ் வீடு…

Bigg Boss Tamil Season 8 Day 72 இல் முதலாவதாக ஜாக்குலின் ராயன் இருவருக்கும் சர்க்கரை பிரித்துக் கொடுப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதை வீட்டில் கேட்டான விஷால் தீர்த்து வைக்கிறார். அடுத்ததாக வீக்லி…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 72 ல் முதலாவதாக ஜாக்குலின் ராயன் இருவருக்கும் சர்க்கரை பிரித்துக் கொடுப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதை வீட்டில் கேட்டான விஷால் தீர்த்து வைக்கிறார். அடுத்ததாக வீக்லி டாஸ்க் ஆரம்பிக்கிறது. அதாவது கன்வேர் பெல்ட்டில் இதற்கு முன்னால் பொம்மை டாஸ்க் தான் நடக்கும். ஆனால் இந்த தடவை கன்வேயர் பெல்ட்டில் செங்கல் அனுப்பப்படும். அதை வைத்து டீம் பிரித்து அவர்கள் கோட்டை கட்ட வேண்டும். யார் அதிகமான கல்லை வைத்திருக்கிறார்களோ அந்த டீமே வெற்றியாளர் என்ற அடிப்படையில் போட்டி தொடங்கியது.

bigg boss 66

எல்லோரும் மிகவும் அடித்து பிடித்து விளையாடினார்கள். வழக்கம் போல ஜெப்ரியும் தாக்கி விளையாட ஆரம்பித்துவிட்டார். விளையாட்டு தொடங்கி 5 நிமிடத்திலேயே ராணவ் கீழே விழுந்து அவரது தோள்பட்டையில் அடிபட்டு விடுகிறது. அவர் வலியில் அழுதாலும் கூட அன்ஷிதா சௌந்தர்யா ஜெஃப்ரி போன்றோர் அவன் நடிக்கிறான் அவன் சும்மா பண்றா அப்படிங்கற மாதிரி கூறினார்கள்.

உடனே விஷால் மற்றும் அருண் Confession ரூமுக்கு கூட்டிச் சென்றனர். ராணவ் சிறிது நேரத்தில் மீண்டும் அழைத்ததால் மருத்துவரை காண சென்றார். ஆனால் அதற்குப் பிறகு பிக் பாஸ் ராணவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்று அறிவித்தார். அது மட்டும் இல்லாமல் தற்காலிகமாக இந்த போட்டி நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் கூறினார்.

அதற்கு அடுத்ததாக கையில் பேக் மாட்டிக்கொண்டு ராணவ் வந்தார். அவர் மூன்று வாரம் ரெஸ்ட் எடுக்க வேண்டும் இந்த கையை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். pressure கொடுக்கக் கூடாது எந்த பிசிகல் டாஸ்க்கும் விளையாடக்கூடாது என்ற பிக் பாஸ் கூறினார். வீட்டின் கேப்டனான விஷாலை கூப்பிட்டும் இதை தெரிவித்தார். பிறகு பிக் பாஸ் ராணவிடம் நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல விரும்புகிறீர்களா என்று கேட்கும் போது நான் இருக்கிற இருந்து நான் விளையாட்றேன் ஒரு கை வச்சுட்டு எல்லாம் செய்வேன் என்று ராணவ் கூறினார்.

அடுத்ததாக வீட்டில் இருக்கும் அனைவரையும் கூப்பிட்டு இந்த விஷயத்தை சொல்லும்போது அன்சிகா சாரி கேட்டு அழுதுவிட்டார். நான் தெரியாம அவன் நடிக்கிறான் என்று சொல்லிட்டேன் என்று கூறினார். அடுத்ததாக சௌந்தர்யா பேச ஆரம்பித்தார். அவரை தடுத்து விட்டார்கள். மஞ்சரியும் முத்துக்குமரனும் இனிமேல் இதுபோல் நாம் நடந்து கொள்ளக்கூடாது. ஒருத்தர் வலியில் இருக்கும் போது அதை ஆராயக்கூடாது என்று கூறினார்கள்.

bigg boss 67

அதற்கு அடுத்ததாக சௌந்தர்யா எதுக்காக சொன்னேனா ராணவ் வந்து எப்போதுமே ஏமாத்துவா அதனால அவன் ஏமாத்துறான் தான் நினைச்சேன் அவன் அந்த மாதிரி விழுந்தது தப்புதான். கவனமா விளையாடியிருக்கணும் என்று சௌந்தர்யா பேசிக் கொண்டிருக்கிறார். இனி இந்த சம்பவம் நடந்ததுக்கு இந்த வாரம் கண்டிப்பாக விஜய் சேதுபதி ஜெபிரியை கேள்வி கேட்க வேண்டும். குறும்படம் கூட இந்த வார இறுதி எபிசோடில் போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இனி ராணவ் இந்த வார இறுதியில் உடல்நலம் காரணமாக எவிக்ட் செய்யப்படுவாரா வீட்டிலிருந்தே வாக்அவுட் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.