Bigg Boss Tamil Season 8 Day 71 இல் முதலாவதாக கேப்டன்சி டாஸ்க்கு நடைபெறுகிறது. ஜாக்குலின் முத்து விஷால் ஆகியோர் பங்கேற்றனர். பிக் பாஸ் இந்த தடவை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பங்கேற்பது போல் ஒரு டாஸ்கை அமைத்திருந்தார். அதாவது வண்டியில் அனைவரையும் ஒவ்வொருவராக குறிப்பிட்ட வெயிட் எட்டும் வரை கொண்டு செல்ல வேண்டும்.
அதில் யார் தலைவராக வேண்டும் என்று ஹவுஸ்மேட்ஸ் யாருக்கு சப்போர்ட் செய்ய விரும்புகிறார்களோ அதன்படி குழு பிரிக்கப்பட்டது. முத்துவிற்கு யாருமே பெரிதாக சப்போர்ட் செய்யவில்லை, விஷாலுக்கும் ஜாக்லினுக்கும் சப்போர்ட் செய்தார்கள். இறுதியில் ராணவ் ட்விஸ்ட் செய்து விஷாலுக்கு சப்போர்ட் செய்ததால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவராக விஷால் ஆனார்.
இதற்குப் பிறகு நிறைய வாக்குவாதங்கள் நடந்தது. முத்துக்குமரன் ஜாக்குலின் மஞ்சரி ராயன் பேசிக்கொண்டிருந்தனர். எதனால் விளையாடவில்லை என்பதை முத்துக்குமரன் விவரித்து கொண்டிருந்தார். சப்போர்ட் பண்றதுக்கு யாருமே இல்ல ராணவ் மஞ்சரி தான் இருந்தாங்க. கடைசில நீயும் மாறிப்போனதுனால இவங்க ரெண்டு பேரும் இருந்தா அவங்களுக்கு கேம் விளையாட முடியாது என்னால அவங்க விளையாடாம இருக்க வேண்டாம் அப்படின்னு தான் ராணவையும் மஞ்சரியும் கேம் குள்ள அனுப்பிவிட்டு நான் பேசாம ஓரமா நின்னுட்டேன் என்று கூறுகிறார்.
அடுத்ததாக நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. வீட்டின் தலைவர் விஷால் மற்றும் நாமினேஷன் பிரீ பாஸ் வைத்திருக்கும் ஜெப்ரியை தவிர அனைவரும் நாமினேஷன் ஆகி இருக்கிறார்கள். அதில் சௌந்தர்யா ஜாக்குலினுக்கு கூறிய காரணம் ஜாக்லினுக்கு மனசு ஒப்பவில்லை எப்படி பிரண்டாக இருந்துட்டு என்னையே இப்படி முதுகுல குத்துற மாதிரி பேசுற என்று கூறி ஜாக்குலின் அழுதார்.
இவர்கள் இருவருக்கும் உண்டான இந்த பிரச்சனை வெகு நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு அடுத்ததாக கிராசரி ஷாப்பிங் செய்வதற்காக பிஸ்கட்டை சாப்பிடும் போட்டியை பிக் பாஸ் வைத்திருந்தார். இந்த டாஸ்கில் மொத்தம் 4000 பாயிண்ட் ஷாப்பிங் செய்வதற்கு கிடைத்தது. அடுத்ததாக ஷாப்பிங் டாஸ்க் முடித்தார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி இந்த வாரம் என்ன டாஸ்கை பிக்பாஸ் கொடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.