Bigg Boss Tamil Season 8 Day 70 இல் முதலாவதாக விஜய் சேதுபதி ரஞ்சித்தின் கேப்பிட்டன்சியை பற்றி கேட்டார். யாருமே கேப்டன் இந்த வாரம் இருந்ததாகவே தெரியவில்லை அவர் இருந்த இடம் தெரியாமல் இருந்தார் பேசக்கூடிய சூழலில் கூட அவரது அதிகாரத்தை காட்டவில்லை என்று கூறினர்.
அதையே தான் விஜய் சேதுபதியும் கூறினார். கேப்டன் இந்த வாரத்தில் இருந்ததாக எங்களுக்கும் தெரியவில்லை என்றார். ரஞ்சித்திடம் 10 வாரங்கள் கடந்துவிட்டது இன்னும் நீங்கள் ஏன் அமைதியாக இருப்பது போல் இருக்கிறீர்கள் ஓபனாக விளையாடுங்கள் என்று பல அறிவுரை கூறினார்.
அடுத்ததாக தர்ஷிகா எலிமினேஷன் நடைபெற்றது. குழப்பத்திலேயே வீட்டில் இருந்து வெளியே வந்தார் தர்ஷிகா. விஜய் சேதுபதி எல்லாரும் பழைய தர்சிகாவை மிஸ் பண்ணினோம் முதல் மூணு வாரத்துல அவ்வளவு ஃபயரா விளையாடுன தர்ஷிகா கண்டிப்பா டாப் 5 ல வருவாங்கனு நாங்க எதிர்பார்த்தோம். நடுவுல நீங்க காணாம போனது எங்களுக்கே வருத்தமா இருந்தது என்று கூறி பயண விடியோவை காட்டினார்.
தர்ஷிகாவின் ஏவியில் அப்பட்டமாக விஷால் பின்னால் சுத்தியதை ஹைலைட் பண்ணி காட்டியிருந்தார்கள். ஏவி முடிந்தவுடன் மறுபடியும் விஜய் சேதுபதி தர்ஷிகாவிடம் கேட்டார் ஏவி பார்த்தீர்களா உங்களுக்கு புரிஞ்சதுல எதனால நீங்க டவுன் ஆயிட்டீங்கனு தெரியுதா என்று கேட்டார். தர்ஷிகாவும் தலையாட்டினார்.
அதாவது விஜய் சேதுபதி நேரடியாக சொல்லாமல் சுற்றி வளைத்து விஷாலால் தான் உங்கள் கேம் போய்விட்டது முதல் ஒரு வாரத்தில் இருந்த மாதிரி விளையாடியிருந்தால் நீங்கள் பைனல்ஸ்க்கு வந்திருக்கலாம் என்பதை கூறிவிட்டார். மக்களின் கருத்தும் அதுவாக தான் இருந்தது.
அதற்கு அடுத்ததாக ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவரையும் Confession ரூமுக்கு அழைத்து விஜய் சேதுபதி ஒவ்வொருவரிடம் தனித்தனியாக பேசினார். பத்து வரங்கள் கடந்துவிட்டது இன்னும் ஐந்து வாரங்கள் தான் மீதமே இருக்கிறது நீங்கள் எப்படி உங்கள் விளையாட்டை விளையாட போகிறீர்கள் என்று கேட்டார். சிலருக்கு அறிவுரை கூறினார். இப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள் இதை மாத்திக்கோங்க என்று கூறினார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது. இனி இந்த வாரம் என்ன டாஸ்க் கொடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.