Bigg Boss Tamil Season 8 Day 67 இல் வழக்கம்போல் மேனேஜர் தொழிலாளி டாஸ்க் சண்டையுடன் ஆரம்பித்தது. மழையில் யூனிஃபார்ம் உடன் நின்று கொண்டிருந்த அன்ஷிதாவை கண்டித்து மேனேஜர்களாக இருந்த தீபக், மஞ்சரி, சௌந்தர்யா உள்ளே போக சொல்கின்றனர்.
அப்போது சௌந்தர்யா வந்து அன்சிதாவின் குடையை தான் இழுத்தார். அந்த நேரத்தில் அனைவரும் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். எப்படி நீங்கள் தொழிலாளி மீது கை வைக்கலாம் என்று கூற ஆரம்பித்து விட்டார்கள். ராணவ் நீங்கள் சௌந்தர்யாவை அடித்துவிட்டீர்கள் என்று கூறினார்.
அடுத்ததாக அனைவரும் இதைப்பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது சௌந்தர்யா அழ ஆரம்பித்துவிட்டார். நான் வந்து உங்க குடைய தான் புடிச்ச கைய பிடிக்கல என்று கூறினார். கடைசியில் அன்சிதாவும் ஒத்துக் கொண்டார். அவங்க என் மேல கை வைக்கல குடையைதான் புடிச்சாங்க என்று கூறினார்கள்.
அடுத்ததாக சைக்கிள் பெடல் செய்யும்போது ஒரு ஆள் பயன்படுத்த வேண்டும். தெரியாமல் ஜாக்குலினும் தீபக் இரண்டு பேர் பயன்படுத்தியதால் ஜாக்குலினை தொழிலாளி இடத்துக்கு அனுப்பி விட்டார் பிக் பாஸ். அடுத்ததாக பாத்ரூம் போனால் எப்படி தொழிலாளி பிரச்சனை பேச முடியும் என்று தர்ஷிகா கத்திக் கொண்டிருந்தார். இது சம்பந்தமாக முத்து பேச வரும்போது அருண் வேற யார்கிட்டயோ பேசிக்கொண்டிருந்தால் முத்து வந்த உடனே இவரிடம் பதில் சொல்ல முடியாது என்று கிளம்பிவிட்டார்.
தொழிலாளிகளில் பெஸ்ட் பர்பாமென்ஸ்களாக ராயனையும் ராணுவையும் மேனேஜர் சைடு இருந்து தேர்ந்தெடுத்தார்கள். அதற்குப் பிறகு இந்த டாஸ்க் முடிந்து விட்டது. இனி அடுத்த எபிசோடில் பெஸ்ட் பெர்ஃபார்மெர்கள் யார், யார் நாமினேஷன் ஃப்ரீ பாஸ் பெறுகிறார் யார் நேரடி நாமினேஷனில் இருக்கப் போகிறார் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.