Bigg Boss Tamil Season 8 Day 66 இல் மேனேஜர் தொழிலாளி டாஸ்க் தொடங்கியது. இன்றைய தினம் நிறைய ஸ்வாப்புகள் நடந்தது. ஒவ்வொருவராக இடம் மாறி கொண்டிருந்தனர். முதலில் அருண் தொழிலாளர்கள் இருந்து மேனேஜராக மாறினார். மீண்டும் பழையபடி அவரையே தொழிலாளராக மாற்றினர்.
பவித்ரா தொழிலாளரில் மேனேஜராக மாறினார். முத்துக்குமரன் தொழிலாளராக மாறினார். வேலை காரணமாக பல வாக்குவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இதில் முத்துக்குமார் ஒரு பெரிய தவறை செய்துவிட்டார். அவர் தொழிலாளராக இருக்கும்போது டாய்லெட் உபயோகப்படுத்தும் கை சைக்கிளை சுத்தும்போது அவர் விளையாட்டுத்தனமாக சும்மா சுத்தி விட்டார்.
இதனால் பிக் பாஸ் தண்ணி வராது என்று கூறிவிட்டார். இதனால் மேனேஜராக இருந்த அருண் தர்ஷிகா இருவரும் மிகவும் முத்துக்குமாரனை சத்தம் போட்டனர். முத்துக்குமரனால் இப்படி ஆகிவிட்டது என்று பர்சனலாக மனதில் விரோதத்தை வைத்துக்கொண்டு பேசுவது போல் தெரிந்தது.
முத்துக்குமரனுக்கு தண்டனையாக கேஸ் சமைத்து முடிக்கும் வரை அவர் தான் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று கூறினார்கள். அப்போது பவித்ரா வந்து பேசிக்கொண்டிருப்பது மிகவும் மனம் நொந்து முத்துக்குமரன் பேசியது காண்பவர்களை பாவம் என்று நினைக்க வைத்தது. நான் வந்து தப்பு பண்ணிட்டேன் எனக்கே தெரியுது நான் உடைஞ்சு போயிட்டேன் அந்த இடத்துல இவன் திருப்பி அடிக்க மாட்டான் அப்படின்னு அவங்க எகிறி பாஞ்சிட்டு அடிச்சது எனக்கு தெரிஞ்சது.
பரவால்ல இந்த டாஸ்க் மூலமா யார் யார் எப்படி இருக்காங்க அப்படிங்கிற உண்மையை நான் தெரிஞ்சுகிட்டேன். அதுல முக்கியமா தர்ஷிகா முத்து சைக்கிள் ஓட்டி சமையல் பண்ணாத சாப்பிட மாட்டேன்னு சொன்னதெல்லாம் எனக்கு மனசுக்கு ரொம்ப சங்கடமா போயிருச்சு என்று கூறுகிறார். அடுத்ததாக ஜாக்லின் முத்துக்குமாருக்கு நிறைய சப்போர்ட் செய்தார் பின்னர் முத்துக்குமரன் கடைசியாக தனியாக சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது பவித்ரா கூட போய் பேசி கொண்டு இருந்தார். நாளுக்கு நாள் இந்த மேனேஜர் தொழிலாளி டாஸ்க் சூடு பிடித்துக் கொண்டே போயிருக்கிறது. இனி இன்றைய தினத்தில் சௌந்தர்யாவை டார்கெட் செய்வது போல் ரானவ் பேசியது அன்சிதாவால் ஏற்பட்ட பிரச்சினை என்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.