Bigg Boss Tamil Season 8 Day 65 ஆரம்பித்தது முதலில் ஒரே சண்டை சச்சரவாக தான் இருந்தது. தீபக் முந்தைய நாள் ஸ்கில் வேலை லேபர் வேலை என்ற இந்த வார்த்தை பயன்படுத்தியிருந்தால் அதைப் பிடித்துக் கொண்டு அருண் வாக்குவாதம் செய்தார். தீபக் என்னை வேலை செய்ய அடிமை மாதிரி நடத்துகிறார் நான் அப்படி கிடையாது என்று பேசிக்கொண்டே இருந்தார் அருண்.
எல்லோரும் சமாதானப்படுத்தியும் அவர் கேட்கவில்லை. பின்னர் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அதற்குப் பிறகு தீபக் சென்று சமாதானப்படுத்தி இருவரும் சமாதனமாகி விட்டனர். அடுத்ததாக முதலாவதாக இந்த வாரம் டாப் 8 போட்டியாளர்கள் யார் பாட்டம் 7 யார் என்று பிரிக்க சொன்னார் பிக் பாஸ்.
அதன்படி பிரித்தனர். அதற்கு அடுத்ததாக இந்த வாரம் மேனேஜர் மற்றும் தொழிலாளி டாஸ்க் ஆரம்பித்தது. இன்று நாள் முழுவதும் அங்கங்கே அருண் தான் கத்திக்கொண்டு இருந்தது போல இருந்தது. டாஸ்க் கோ ஆப்பரேட் பண்ணி செய்யணும் என்பது போல் அவர் நடந்து கொள்ளவில்லை. பாட்டம் 7 இல் இருந்தவர்கள் தொழிலாளர்களாக இருந்தனர். டாப் 8 இல் இருந்தவர்கள் மேனேஜர்களாக இருந்தனர். இந்த நிலைமை ஒவ்வொரு நாளும் மாறும்.
மேனேஜரிலிருந்து ஒருவர் தொழிலாளியாக மாறுவார். தொழிலாளியாக இருந்து ஒருவர் மேனேஜராக மாறுவார். மேனேஜராக இருப்பவர்கள் நாமினேஷன் ப்ரீயில் இருப்பார் தொழிலாளியாக இருப்பவர்கள் டேஞ்சரஸ் சோனில் இருப்பார்கள் என்று பிக் பாஸ் கூறினார். அதன்படி டாஸ்க் நடந்து கொண்டிருந்தது.
அதாவது தொழிற்கூடம் என்று அமைத்து அதில் சைக்கிள் ஓட்டினால் தான் தண்ணீர் கேஸ் போன்றவை கிடைக்கும். அதை வைத்து தான் வீட்டில் இருப்பவர்கள் சமைக்கவும் மற்ற வேலைகளும் செய்ய முடியும் என்ற போல் இருந்தது. டாஸ்க் ஆரம்பித்த முதல் நாளே சண்டையாக போய் கொண்டிருக்கிறது. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.