Bigg Boss Tamil Season 8 Day 64 இல் ரஞ்சித்தின் கேப்டன்சி ஆரம்பித்தது. ஆரம்பித்த முதலிலேயே சிக்கலில் மாட்டிக் கொண்டார் ரஞ்சித். வீட்டில் யார்யார் என்ன பணிகளை செய்வது என்று பிரிக்கும் போது பலவித பிரச்சினைகள் நடந்தது.
அப்போது தர்ஷிகா எழுந்து வந்து நான் இவரது கேப்பிட்டன்சியில் இருக்கும் மூன்று முட்டைகளில் ஒரு முட்டையை எடுத்து விடுகிறேன் ஏனென்றால் அவர்தான் வீட்டில் அனைவரையும் கட்டுப்படுத்த வேண்டும் ஆனால் ரஞ்சித் சார் எல்லோரையும் சண்டையிட வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கிறார் என்று ஒரு முட்டையை எடுத்து விட்டார்.
அடுத்ததாக நாமினேஷன் பிராசஸ் நடந்தது. இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் சௌந்தர்யா ஜாக்குலின் தர்ஷிகா விஷால் அருண் ஹன்சிகா ராயன் உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் பட்டப்பெயர் வைக்கும்படி பிக் பாஸ் கூறினார். அதில் ஒரு சில பேருக்கு badge அனுப்பி இருக்கிறார்.
இதில் தர்ஷிகாவுக்கு விஷப்பாட்டில் அருணுக்கு டுவிஸ்டர் சௌந்தர்யாவுக்கு இம்சை ராணி ஜாக்குலின்க்கு நடிகை போன்ற பல பெயர்கள் வந்தது. அடுத்ததாக இந்த வாரத்திற்கான கிராசரி டாஸ்கை நடத்தினார் பிக் பாஸ். இதில் வெறும் 3000 ரூபாய் மட்டுமே கிடைத்தது. அதை வைத்து ஷாப்பிங் செய்தனர்.
அதற்கு அடுத்ததாக பவித்ராவும் தர்ஷுக்காகவும் லிவிங் ஏரியாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பவித்ரா விஷால் பற்றி தர்ஷிகாவிடம் கேட்கிறார். நீ என்ன செய்றன்னு உனக்கு தெரியுதா நீ வெளியே இப்படி கிடையாது இது உன் லைஃபை பாதிக்கும் அம்மா பார்க்க மாட்டாங்களா என்று அறிவுரை கூறுகிறார் பவித்ரா. நான் விலகி இருக்கணும் தான் நினைக்கிறேன் எனக்கு எல்லாமே புரியுது இந்த ஸ்பேஸ் குள்ள இருக்கறதுனால இப்படி நடக்குது என்று புரிய வைக்கிறார். இதனால் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.