Bigg Boss Tamil Season 8 Day 62 இல் விஜய் சேதுபதி எபிசோடு தொடங்கியது. இந்த வாரம் மிகுந்த எதிர்பார்ப்போடு தான் எபிசோடு தொடங்கியது. ஏனென்றால் இந்த வாரம் ஏஞ்சல் மற்றும் டெவில் டாஸ்க் படு பயங்கரமாக நடந்தது. பல சண்டைகள் நடந்தது. அதையெல்லாம் விஜய் சேதுபதி கேட்பாரா என்று மக்கள் எதிர்பார்த்தனர்.
அதேபோல நேற்று நிறைய கேள்விகளை விஜய் சேதுபதி கேட்டார். போன வாரம் அவரை பற்றிய நெகட்டிவ் பேச்சுகள் அனைத்தையும் பாசிட்டிவாக மாற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். முதலில் டெவில் டாஸ்கை விளையாடாதவர்கள் யார் என்பதை கேட்டார். அனைவரும் ஜாக்குலின் சௌந்தர்யாவை கூறினர். இருவரையும் எழுப்பி ஏன் நீங்கள் விளையாடுவதற்கு ட்ரை கூட செய்யவில்லை எத்தனை வாரங்களை கடந்து பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாட்டு தீவிரமாக போய்க் கொண்டிருக்கும் போது இப்படி செய்யலாமா என்று கேட்டார்.
அடுத்ததாக கோவா கேங் மாட்டிகொண்டனர். கோவா கேங்கில் இருக்கும் ஜாக்குலின் சௌந்தர்யா ஜெஃப்ரி ராயன் ரஞ்சித் ஆகிய ஐந்து பேரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்து விட்டார் விஜய் சேதுபதி. நீங்கள் பிரண்ட்ஷிப்பை இருங்க வேண்டாம்னு சொல்லல ஆனா அது கேமை பாதிக்கும். நீங்க ஒன்னும் சேர்ந்து விளையாடுனீங்கனா மத்தவங்களோட தனித்திறமை வெளியே வராமல் பேரும் individual game இருக்காது என்று கூறினார்.
கேங் மட்டும் ஃபார்ம் பண்ணது இல்லாம அதுக்கும் தனி ரூல்ஸ் வேற போட்டு இது வச்சுட்டு இருக்கீங்க. இனிமே இது இருக்கக்கூடாது என்று கூறினார். இனி அடுத்ததாக எபிசோடில் இரண்டு eviction நடைபெற இருக்கிறது ஆனந்தியும் சாச்சனாவும் தான் வெளியேறப் போகிறார்கள் என்று தகவல் வெளியாகியிருக்கிறது யார் போக போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.