Bigg Boss Tamil Season 8 Day 57 இல் பொம்மை டாஸ்கை பற்றி பேச ஆரம்பித்தார் விஜய் சேதுபதி. இதுவரை யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் என்னவென்றால் அதிக பேரை இந்த டாஸ்கில் அவுட் செய்தது பவித்ரா தான். இது யாருமே கண்டுபிடிக்கவில்லை. பவித்ராவை எழுப்பி கேள்விகளால் வச்சு செய்து விட்டார் விஜய் சேதுபதி என்று தான் சொல்ல வேண்டும்.
பவித்ரா ஒத்துக் கொள்ளவே இல்லை. ஆனால் நீங்கள் உங்களுக்காக தான் விளையாடிருக்கிங்க அத Strategy அப்படினு ஏன் ஒத்துக்கொள்ள மாட்றீங்கனு விஜய் சேதுபதி கேட்டார். இதுவே பார்வையாளர்களுக்கு ஷாக்காக தான் இருந்தது. பவித்ரா இப்படி கூட விளையாடுவாங்களா என்று தோன்றியது.
அடுத்ததாக ராயன் ராணவ் ஜெஃப்ரி மூன்று பேரும் டாஸ்கின் போது அடிக்க சென்றது பற்றி கண்டித்தார் விஜய் சேதுபதி. அடுத்ததாக மிட்நைட் பிரியாணி குழுவை எழுப்பி கேள்வி கேட்டார் விஜய் சேதுபதி. ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டார் பிறகு மற்ற ஹவுஸ்மெசிடம் ஒப்பினியன் கேட்டார். தீபக் எத்தனை நாள் அரிசி இல்லைனு கவலைபட்டிருக்கேன் இவங்க இப்படி ஒரு வேலை பாத்திருக்காங்க என்று தீபக் கூறினார்.
பிறகு சௌந்தர்யா என்னை பிரிட்ஜ்ல ஒரு பொருளை எடுக்க விட மாட்டாங்க சார் இப்போ இப்படி பண்ணி இருக்காங்க இனிமே நான் எல்லாமே திருடுவேன் என்று சொன்னார். அடுத்ததாக இந்த வாரம் பெஸ்ட் பர்பாமன்ஸராக ஜெபிரி சாச்சனா தேர்ந்தெடுத்ததை பாராட்டினார். நீங்கள் இருவரும் இப்படி வருவீர்கள் எதிர்பார்க்கவில்லை இம்ப்ரூவ்மென்ட் இருக்கு இப்படியே போங்க என்று கூறினார் விஜய் சேதுபதி.
ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த வாரம் காரசாரமில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதே கமலஹாசன் இருந்திருந்தால் எபிசோடு அனல் பறந்து இருக்கும் அவ்வளவு விஷயங்கள் இந்த வாரம் நடந்தது. எல்லாமே எதிர்பார்த்ததை விட புஸ்சென்று போய்விட்டது என்று பார்வையாளர்கள் விஜய் சேதுபதி மீது அதிருப்தியில் தான் இருக்கிறார்கள்.