Bigg Boss Tamil Season 8 Day 56: சத்யாவுக்கு கிடைத்த பாராட்டு… சாச்சனாவை எச்சரித்த விஜய் சேதுபதி!

Bigg Boss Tamil Season 8 Day 56 இல் வார இறுதி எபிசோட் ஆரம்பித்தது. எபிசோடு ஆரம்பத்திலேயே விஜய் சேதுபதி அருணின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பைவ் ஸ்டார் சாக்லேட் அனுப்பி அனைவருக்கும்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 56 இல் வார இறுதி எபிசோட் ஆரம்பித்தது. எபிசோடு ஆரம்பத்திலேயே விஜய் சேதுபதி அருணின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பைவ் ஸ்டார் சாக்லேட் அனுப்பி அனைவருக்கும் கொடுக்கச் செய்தார். கடந்த வாரம் ராணுவுக்கு பிறந்தநாள் வந்தது அதில் எதுவுமே செய்யவில்லை.

bigg boss 27

இந்த வாரம் நடந்த தீபக்கின் கேப்பிட்டன்சி பற்றி விசாரித்தார் விஜய் சேதுபதி. பெரும்பாலானோர் அவருக்கு ஆதரவாக அவர் நன்றாக இந்த வாரம் கேப்பிட்டன்சியை கொண்டு சென்றார் யாருமே இந்த வாரம் பகல்ல நாங்க தூங்கல எங்களை வந்து என்கேஜராகவே வைத்திருந்தார் எல்லாத்தையும் பிளான் பண்ணி செய்தார் என்று கூறினார்கள்.

விஜய் சேதுபதியும் தீபக் கேப்பிட்டன்சிக்கு பாராட்டு கூறினார். அடுத்ததாக சாச்சனா பூவை கட் பண்ணியது எதற்காக என்ற பிரச்சினையை எடுத்து கேட்டார் விஜய் சேதுபதி. சுற்றி வளைத்து இதை சுத்தி சுத்தி எங்க கொண்டு போனாங்கனே தெரியல அந்த மாதிரி சாச்சனா எல்லாவற்றையும் சுத்தி விட்டார். ஒரு பாத்திராத்தை கழுவி இருக்கலாம் நான் கழுவாம விட்டுட்டேன் அப்படின்னு அந்த ஒரு வார்த்தையில் முடிந்திருந்தால் இது அதோட முடிந்திருக்கும்.

அது எங்கெங்கோ கொண்டு போய் விட்ட இடத்துக்கே வந்தது போல் சாச்சனா செய்துவிட்டார். இதை விஜய் சேதுபதியும் கூறினார். நீ ரொம்ப எல்லாத்தையும் தலைக்கு மேல எடுத்துட்டு இருக்க அப்படி பண்ணாத என்று கூறினார். அடுத்ததாக மஞ்சரியின் விஷயத்தை பேசினார்.

மஞ்சரி நீங்க கேட்ட கேள்வி சரிதான் ஆனா நீங்க உங்களுக்காக யோசிக்கிற மாதிரி மத்தவங்க பத்தி யோசிக்கணும் நீங்க பேசும்போது மத்தவங்க எதிரிலே இருக்குறவங்க எந்த மாதிரி எடுத்துக்குவாங்கங்கறத நீங்க பாக்கணும் என்று கூறினார். அடுத்ததாக சத்யா வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சிறு வண்டு கன்னிவெடி பாம் என்று பெயர் வைத்தார். சத்யா முதலில் ஒரு பேர்தான் சொன்னார் அப்புறம் விஜய் சேதுபதி ஆர்வமாக கேட்டவுடன் எல்லோருக்கும் சத்யா பெயர் வைத்தார். இது கேட்பதற்கு நல்ல சுவாரசியமாக இருந்தது.

bigg boss 28

விஜய் சேதுபதியும் சத்யாவை இதற்காக பாராட்டினார். நீங்க பேசுறது ரொம்ப நல்லா இருக்கு. ஆனா நீங்க தயங்குறீங்க அது வேண்டாம் முன்ன வந்து சொல்லுங்க தப்பா இருந்தாலும் பரவால்ல என்று விஜய் சேதுபதி கூறினார். இனி நாளை எபிசோடு வேறு என்ன முக்கியமான சம்பவங்களை கேட்க போகிறார் விஜய் சேதுபதி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.