Bigg Boss Tamil Season 8 Day 51: வீடு ஒன்றுப்பட்டதால் மாறிய ஆட்டம்… நாமினேஷனால் அழுத ஜாக்குலின்!

Bigg Boss Tamil Season 8 Day 51 இல் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் பிக் பாஸ் கோட்டை அழித்துவிட்டார். எல்லாரும் எந்த இடத்திலும் இருக்கலாம்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 51 இல் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் இருக்கின்றனர். ஏனென்றால் பிக் பாஸ் கோட்டை அழித்துவிட்டார். எல்லாரும் எந்த இடத்திலும் இருக்கலாம் அதே போல் இனி தனி தனி டீம் கிடையாது. எல்லாரும் சேர்ந்துதான் விளையாட போகிறீர்கள் என்று அறிவித்துவிட்டார். இதற்கு பிறகு கேம் மாறும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.

bigg boss 13

அதுபோலவே தனித்தனியாக குரூப் பிரித்து எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். இனி தான் தனித்தனியாக குரூப் ஃபார்ம் ஆகும் போல் தெரிகிறது. இதற்கிடையில் விஷால் தர்ஷிகா லவ் கன்ன்ட் ஓட்டுவதற்கு ட்ரை செய்வது போல் இருவரும் ஒவ்வொரு இடத்தில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அடுத்ததாக எவிக்ஷன் ப்ராசஸ் நடந்தது. டைரக்ட் நாமினேஷனில் சத்யா ஜாக்குலினை நாமினேட் செய்தார். ஜாக்குலின் ரொம்ப டாக்ஸியாக இருக்கிறார் என்று சத்யா சொன்னவுடன் ஜாக்குலின் மிகவும் அழ ஆரம்பித்து விட்டார். நான் என்ன அப்படி செஞ்சேன் ஓபனா இருக்கிறது தப்பா என்று சௌந்தர்யாவிடம் கூறி அழுதார். அடுத்ததாக னந்தி ரஞ்சித்தை நாமினேட் செய்தார்.

இந்த முறை அனைவரும் கார்டன் ஏரியாவில் நாமினேஷன் செய்தனர். அதன்படி இந்த வாரம் நாமினேட் னவர்கள் சாச்சனா மஞ்சரி ரஞ்சித் ஜாக்குலின் சிவக்குமார் ஆகியோர் நாமினேட் ஆனார்கள். அடுத்ததாக கிராசரி டாஸ்க் பொதுவாக நடைபெற்றது.

அனைவரும் பிளாஸ்மா டிவியின் முன்பு அமர்ந்து ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்ப கிராசரி ஷாப்பிங் செய்தார்கள். அடுத்ததாக தீபக் கேப்பிட்டன்சியின் முதல் நாள் மிகவும் நன்றாக சென்றது என்று பிக் பாஸ் தீபக்கை பாராட்டினார். நாய் குறைக்கவில்லை எந்த அறிவிப்பும் வரவில்லை கரெக்டாக வீட்டை வழி நடத்தினீர்கள் என்று பிக் பாஸ் அறிவித்தார்.

bigg boss 14

அடுத்ததாக அருணுக்கும் முத்துக்குமார்க்கும் மோதல் ஏற்பட்டது. வீட்டில் பொருளை வீண் செயிரீங்க என்று முத்துக்குமார் கூறும்போது நடுவில் அருண் வந்து சண்டையிட்டார். சில நாட்களாக அருண் நடந்து கொள்வதை பார்க்கும்போது முத்துக்குமார் மேல் அதீத பொறாமையில் இருக்கிறார் என்பது தெரிகிறது. இனி இந்த வாரம் பிக் பாஸ் என்ன டாஸ்க் கொடுப்பார் வீடு ஒன்று பட்டதால் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.