Bigg Boss Tamil Season 8 Day 49: வஞ்சப்புகழ்ச்சியால் வச்சு செய்த விஜய் சேதுபதி… கதறி அழுத சாச்சனா!

Bigg Boss Tamil Season 8 Day 49 இல் விஜய் சேதுபதி எபிசோட் ஆரம்பித்தது. ஆரம்பிக்கும்போதே ஆடியன்ஸ்களிடம் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் எப்படி போனது என்று கேட்டார். ஒருவரும் சரியாக…

Bigg Boss

Bigg Boss Tamil Season 8 Day 49 இல் விஜய் சேதுபதி எபிசோட் ஆரம்பித்தது. ஆரம்பிக்கும்போதே ஆடியன்ஸ்களிடம் இந்த வாரம் ராஜா ராணி டாஸ்க் எப்படி போனது என்று கேட்டார். ஒருவரும் சரியாக பதில் சொல்லவில்லை. நாம் அவர்களை முதலில் புகழ்ந்து விட்டு அதற்குப் பிறகு என்னவென்று கேட்போம் நீங்கள் சப்போர்ட் செய்யுங்கள் என்று கூறினார். அதாவது வஞ்சப்புகழ்ச்சி அணி ஸ்டைலில் பண்ண வேண்டும் என்பது போல் தான் தெரிந்தது.

Bigg Boss 7

அதேபோல் ஹவுஸ்மேட் இடம் நீங்கள் பண்ணியது ஆகா ஓகோ எப்படி இருந்தது அப்படி என்று பேசினார் விஜய் சேதுபதி. ஆனால் housemates உண்மையிலேயே விஜய் சேதுபதி பாராட்டுகிறார் என்பது போல் தான் ரியாக்சன் கொடுத்தனர். கடந்த ஏழு சீசன்ளை விட எட்டாவது சீசன் எப்படி இருக்கிறது என்று ஒவ்வொருவரிடம் கேட்டார் விஜய் சேதுபதி.

ஒவ்வொருவரும் எங்க சீசன் தான் பெஸ்ட் நாங்க வன்மம் இல்லாம விளையாடுகிறோம் ரொம்ப இன்வால்வ்மெண்ட் ஓட இருக்கிறோம் அப்படி இப்படின்னு பேசினார்கள். ஆனால் வெளியில் என்ன நடந்தது என்பது அவர்களுக்கு தெரியவில்லை. கடந்த வாரம் டாஸ்க்கில் ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அடுத்ததாக விஜய் சேதுபதி ராணியாக சாச்சனா செய்ததை பேசினார். ஜெப்ரிக்கு கொடுத்த டாஸ்க்கினால் அவர் கால் வலியால் இருந்ததைப் பற்றியும் பேசினார். சாச்சனாவை ரோஸ்ட் செய்துவிட்டார். அவர் பேசியதை தாங்க முடியாத சாச்சனா கத்தி கதறி அழுது விட்டார். வீட்டில் உள்ள அவ்வளவு பேரும் சமாதானம் செய்தார்கள். இன்னும் சாச்சனாவின் ரோஸ்ட் முடியவில்லை.

Bigg Boss 8

அடுத்ததாக மஞ்சரியின் கேப்பிட்டன்சியை பற்றி பல உரையாடல் நடந்தது. இனி அடுத்த எபிசோடில் விஜய் சேதுபதி ராஜா ராணி டாஸ்கை எப்படி விட்டீர்கள் என்பதை கேட்பார் என்று தோன்றுகிறது. அதுமட்டுமில்லாமல் முக்கியமான விஷயம் விஜய் சேதுபதி கேட்க வேண்டும் என்று பார்வையாளர்கள் நினைப்பது நடு ராத்திரியில் விஷால் அன்சிதா தர்ஷிகா அருண் கிராசரி எடுத்து சமைத்து சாப்பிட்டது. இதனால் மறுநாள் முத்துவும் தீபக்கும் சாப்பிடாமல் இருந்தனர். இதை அவர் கட்டாயம் கேட்க வேண்டும் கேட்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.