Bigg Boss Tamil Season 8 Day 47: Roast செய்தவர்களையே திருப்பி அடித்த சௌந்தர்யா… வீட்டின் தலைவரான தீபக்!

Bigg Boss Tamil Season 8 Day 47 இல் டாஸ்கெல்லாம் முடிந்தது அதற்குப் பிறகு பிக் பாஸ் யார் பெஸ்ட் பெர்பாமர் ஒர்ஸ்ட் performer போன்றவை தேர்ந்தெடுக்க சொன்னார். பெஸ்ட் பர்பாமராக பவித்ராவும்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 47 இல் டாஸ்கெல்லாம் முடிந்தது அதற்குப் பிறகு பிக் பாஸ் யார் பெஸ்ட் பெர்பாமர் ஒர்ஸ்ட் performer போன்றவை தேர்ந்தெடுக்க சொன்னார். பெஸ்ட் பர்பாமராக பவித்ராவும் தீபக்கும் தேர்ந்தெடுத்தனர். ஒர்ஸ்ட் பர்பாமராக ஆக சௌந்தர்யாவையும் சிவகுமாரையும் தேர்ந்தெடுத்தனர்.

bigg boss 4

ஒர்ஸ்ட் பர்பாமரான சௌந்தர்யா மற்றும் சிவகுமாரை பிக் பாஸ் buzzer அடிக்கும் போதெல்லாம் ரோஸ்ட் செய்ய வேண்டும். பாரபட்சம் இன்றி நேருக்கு நேராக ரோஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படி அனைவரும் ரோஸ்ட் செய்தார்கள்.

ரோஸ்டு செய்ததிலேயே டீசன்டாக செய்தது முத்துக்குமார் ஜாக்குலின் மட்டும்தான். மற்றவர்கள் அனைவரும் மனசில் இருந்த வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள இதுதான் கிடைத்த வழி என்பது போல சௌந்தர்யா மீது குற்றச்சாட்டுகளையும் வைத்து ரோஸ்ட் செய்தனர்.

அதற்கு அடுத்ததாக சௌந்தர்யாவும் விடவில்லை ஆண்கள் அணி பெண்கள் இடத்திற்கு வருவதற்காக டாஸ்க் செய்ய வேண்டும். அது போல் ஆண்கள் அனைவரையும் கூப்பிட்டு சௌந்தர்யா சேர் போட்டு அமர்ந்து ஒவ்வொருவரையும் முகத்துக்கு நேராக ரோஸ்ட் செய்து விட்டார். இது பார்ப்பதற்கே நன்றாக இருந்தது .

அடுத்ததாக கேபிடன்சி டாஸ்க் நடைபெற்றது. இந்த கேப்பிட்டன்சி டாஸ்க்கில் தீபக் வெற்றி பெற்று பிக் பாஸ் வீட்டில் அடுத்த வார தலைவராக ஆனார். அதற்குப் பிறகு ஒவ்வொருவரும் கடந்த வார நிகழ்வுகளை பற்றிய பேசிக் கொண்டிருந்தனர்.

அனைவரும் ரோஸ்ட் செய்ததை பொறுமையாக சிரித்துக்கொண்டே கேட்டுக் கொண்டிருந்த சௌந்தர்யா இறுதியில் ஒரு கட்டத்திற்கு மேல் கண்ட்ரோல் செய்ய முடியாமல் அழ ஆரம்பித்துவிட்டார். தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது ஜாக்குலின் தான் சௌந்தர்யாவுக்கு ஆறுதல் கூறினார்.

bigg boss 5

சாச்சனா நான் அழுவது காமெடியாக தான் இருக்கிறது என்று கூறியது எனக்கு மனசுக்கு ரொம்ப சங்கடமாக போய்விட்டது என்று சௌந்தர்யா சொல்லி அழுதார். இந்த வாரம் எதுவுமே சுவாரசியமாக நடக்கவில்லை. அதனால் விஜய் சேதுபதி இந்த வாரம் எபிசோடு பற்றி எப்படி பேசுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.