Bigg Boss Tamil Season 8 Day 46: ராஜா ராணி டாஸ்கில் வென்ற ஆண்கள் அணி… அரியணையை வீட்டுக்கொடுத்த பெண்கள்!

Bigg Boss Tamil Season 8 Day 46 இல் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்றது. உண்மையில் சொல்லப்போனால் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் ஏன்டா இந்த டாஸ்க்கை கொடுத்தார்கள் என்பது போல் தான்…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 46 இல் ராஜா ராணி டாஸ்க் நடைபெற்றது. உண்மையில் சொல்லப்போனால் ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் ஏன்டா இந்த டாஸ்க்கை கொடுத்தார்கள் என்பது போல் தான் விளையாடினார்கள். பார்வையாளர்களுக்கு மிகவும் போர் அடிக்கும் வகையில் தான் இந்த டாஸ்க் இருந்தது.

bigg boss 1

இந்த டாஸ்க் முடிந்தால் நல்லா இருக்குமே என்று நினைக்கும் அளவுக்கு ஜவ்வாக இழுத்து விட்டார்கள். எந்த ஒரு சுவாரசிய சம்பவமே நடக்கவில்லை என்று சொல்லலாம். மற்ற சீசனங்களில் எல்லாம் ராஜா ராணி டாஸ்காகட்டும் எந்த டாஸ்காக எடுக்கட்டும் ஒரு சுவாரசியம் வீடு ரெண்டு படும் அளவுக்கு சண்டை நடக்கும்.

இதில் எல்லாரும் விட்டுக் கொடுப்பது போலே விளையாடினார்கள். அப்போது எதற்கு விளையாட்டு நடத்த வேண்டும் என்பது போல் இருந்தது. ஆனாலும் ஆண்கள் அணியில் கொஞ்சம் முனைப்போடு விளையாடியதால் அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வென்று முன்னேறி முன்னேறி கடைசியில் அரியணையை பிடித்து விட்டார்கள். பெண்கள் அணி எந்த ஒரு போட்டிலுமே வெல்லவில்லை சரி அவர்களே எடுத்துக் கொள்ளட்டும் என்று அரியானையை விட்டுக் கொடுப்பது போல் தான் இருந்தது.

bigg boss 2

மொத்தத்தில் இந்த ராஜா ராணி டாஸ்க் வைக்காமலே இருந்திருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. இந்த ராஜா ராணி டாஸ்கை எவ்வளவு கிரியேட்டிவ் ஆக கொண்டு போவதற்கு பல விஷயங்கள் இருந்தது. ஆனால் யாருமே அதற்கான முயற்சியை செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதைப் பற்றி கண்டிப்பாக இந்த வார இறுதி எபிசோட் விஜய் சேதுபதி பேசுவார். மக்களுடைய கருத்தை அவர் கண்டிப்பாக கூறவேண்டும். இப்படியே சென்றால் பிக் பாஸ் டிஆர்பி குறைந்து விடும் என்று தான் சொல்ல வேண்டும்.