Bigg Boss Tamil Season 8 Day 45: தொடங்கியது ராஜா ராணி டாஸ்க்… Danger Zone இல் இருந்து தப்பித்த சிவக்குமார்!

Bigg Boss Tamil Season 8 Day 45 இல் ராஜா ராணி டாஸ்க் ஆரம்பித்துவிட்டது. இந்த முறை ராஜா ராணி ஆக பிக் பாஸ் தேர்ந்தெடுத்தவர்கள் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.…

bigg boss

Bigg Boss Tamil Season 8 Day 45 இல் ராஜா ராணி டாஸ்க் ஆரம்பித்துவிட்டது. இந்த முறை ராஜா ராணி ஆக பிக் பாஸ் தேர்ந்தெடுத்தவர்கள் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இருவருக்குமே அவரவர் பதவியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியவில்லை. ஒரு அதிகாரமே அவர்களிடம் இல்லை.

bigg boss 2024 11 21T164205.111

மற்ற சீசன்களை விட இந்த ராஜா ராணி டாஸ்க் இந்த சீசனில் மிகவும் சுவாரஸ்யம் குறைவாகத்தான் சென்றது. housemates க்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆண்கள் அணியில் தீபக் முத்துக்குமார் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை ஓரளவு நன்றாக செய்தனர். பெண்கள் அணியில் அவ்வப்போது அவர்களது கதாபாத்திரத்தை விட்டு வெளியே வந்து விடுகிறார்கள்.

இதற்கிடையில் பிக் பாஸ் நாமினேஷன் ஃப்ரீ டாஸ்கான இறுதி கட்ட போட்டியை நடத்தினார். இந்த டாஸ்க்கில் ஆண்கள் அணி அபாரமாக வெற்றி பெற்றது. அவர்கள் வெற்றி பெற்றதுடன் அணியுடன் கலந்துரையாடி இந்த வாரம் டேஞ்சர் சோனில் இருந்த சிவகுமாரை எவிக்சன் பிரீ பாஸை கொடுத்து காப்பாற்றி விட்டார்கள். இந்த முடிவு சரியானது என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சிவக்குமார் டேஞ்சர் சோனில் தான் இருந்தார்விக்ட்டாகும் நிலையில் தான் இருந்தார்.

bigg boss 2024 11 21T164305.519

அடுத்ததாக களிமண்ணால் பொருட்கள் செய்யும் டாஸ்க் வைத்திருந்தார் பிக் பாஸ். அதிக மதிப்பெண் பெற்று பெண்களை விட ஆண்கள் அணி வெற்றி பெற்றனர். இறுதியாக சாச்னா தன்னை ஏன் கலாய்க்கிறீர்கள் என்பது போல டாஸ்க் முடித்தவுடன் சண்டையை ஆரம்பித்தார். அதாவது அவர் இப்போது பதிலடி கூறி இருக்கக் கூடாது. ராணியாக இருப்பவர்கள் அதிகாரத்தோடு இருப்பவர்கள் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அந்த நேரத்தில் செய்யாமல் இறுதியாக தான் சத்தம் கொடுத்தார் சாச்சனா. இந்த எபிசோடில் ராஜா ராணி டாஸ்க்கில் எந்த சுவாரசியமும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். போகப் போக ஏதாவது வித்தியாசமாக செய்கிறார்களா என்பதை பற்றி இனி பொறுத்து இருந்து பார்ப்போம்.